முதல்வர் தொகுதியில் அதிர்ச்சி... அதிமுகவின் முக்கிய நிர்வாகி ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்..!

Published : Mar 10, 2021, 03:06 PM IST
முதல்வர் தொகுதியில் அதிர்ச்சி... அதிமுகவின் முக்கிய நிர்வாகி ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்..!

சுருக்கம்

எடப்பாடி தொகுதி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.வான ஐ.கணேசன் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். 

எடப்பாடி தொகுதி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.வான ஐ.கணேசன் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். 

திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் நேற்று மாலை சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.வான ஐ.கணேசன், அவரது மகன் டாக்டர் ஐ.ஜி.நாகராஜன் ஆகியோர் திமுகவில் இணைந்தனர். அவர்களை வரவேற்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கட்சியின் உறுப்பினர் அடையாள அட்டையை வழங்கினார். 

அப்போது திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், சேலம் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் டி.எம்.செல்வகணபதி ஆகியோர் உடனிருந்தனர். 1977, 1980 ஆகிய தேர்தல்களில் அதிமுக சார்பில் எடப்பாடி தொகுதியில் வென்ற ஐ.கணேசன், 1996, 2001 தேர்தல்களில் பாமக சார்பில் எடப்பாடி தொகுதியில் வென்றார். பின்னர், அதிமுகவில் இணைந்தவர். தற்போது திமுகவில் சேர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

PREV
click me!

Recommended Stories

ஸ்டாலின் ரெடியாக இருங்க.. அடுத்த டார்கெட் தமிழ்நாடு தான்.. பிரதமர் மோடி மண்ணில் அமித்ஷா சபதம்!
ரூ.1,020 கோடி ஊழல்? ED-க்கும், பாஜகவுக்கும் அஞ்ச மாட்டோம்.. கே.என்.நேரு விளக்கம்!