அடுத்த 24 மணி நேரத்திற்கு தென் தமிழகம், மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய பகுதிகளில் மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்.

By Ezhilarasan BabuFirst Published Mar 10, 2021, 2:57 PM IST
Highlights

குமரிக்கடல் முதல் வட கேரள பகுதி வரை (ஒரு கிலோமீட்டர் உயரம்வரை) நிலவும் காற்றின் சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு தென் தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 

குமரிக்கடல் முதல் வட கேரள பகுதி வரை (ஒரு கிலோமீட்டர் உயரம்வரை) நிலவும் காற்றின் சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு தென் தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும்  வறண்ட வானிலையே நிலவும்.11.03.2021: மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய இலேசான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும்  வறண்ட வானிலையே நிலவும். 

12.03.2021: தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.13.03.2021: தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும்  வறண்ட வானிலையே நிலவும்.14.03.2021: தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இலேசான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும்  வறண்ட வானிலையே நிலவும். 

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்தில் முற்பகலில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடனும் அதன்பிறகு தெளிவாகவும் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.கடந்த 24 மணி நேரத்தில் மழை அளவு (சென்டிமீட்டரில்): மைலாடி (கன்னியாகுமரி) 7, ராதாபுரம்  (திருநெல்வேலி) 4, தூத்துக்குடி வட்டாச்சியர் அலுவலகம், கொட்டாரம் (கன்னியாகுமரி) தலா 3, நாங்குநேரி  (திருநெல்வேலி), ஸ்ரீவைகுண்டம்  (தூத்துக்குடி), நாகர்கோயில்  (கன்னியாகுமரி) தலா 2.
 

click me!