பெண் SP-க்கு பாலியல்தொல்லை வழக்கு. 50 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் தகவல்.

Published : Mar 10, 2021, 02:20 PM IST
பெண் SP-க்கு பாலியல்தொல்லை வழக்கு. 50 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் தகவல்.

சுருக்கம்

இந்நிலையில், ஐபிஎஸ் அதிகாரிகள் சம்பந்தப்பட்டுள்ளதால், இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி, சென்னை அண்ணா நகரை சேர்ந்த ஓய்வுபெற்ற காவல்துறை கூடுதல் எஸ்.பி.-யான கே.ராஜேந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.  

பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சிறப்பு டிஜிபி மீதான புகாரின் அடிப்படையில் 50 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக தமிழக அரசுத்தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை அளித்ததாக சிறப்பு டிஜிபிக்கு எதிரான வழக்கை சிபிசிஐடி விசாரணை செய்து வருகிறது. 

இந்நிலையில், ஐபிஎஸ் அதிகாரிகள் சம்பந்தப்பட்டுள்ளதால், இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி, சென்னை அண்ணா நகரை சேர்ந்த ஓய்வுபெற்ற காவல்துறை கூடுதல் எஸ்.பி.-யான கே.ராஜேந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, ஏற்கனவே இந்த விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளதாகவும், விசாரணையை உயர் நீதிமன்றம் கண்காணிக்கும் என உத்தரவிட்டுள்ளதாகவும் தமிழக அரசுத்தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டது. 

மேலும், இந்த சம்பவம் குறித்து விசாரிக்க விசாகா குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த வழக்கு தொடர்பாக 50  சாட்சிகள் விசாரிக்கப்பட்டுள்ளதாகவும், வீடியோ ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாகவும்  அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை பதிவு செய்த நீதிபதிகள், வழக்கு விசாரணையை நான்கு வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.

 

PREV
click me!

Recommended Stories

மரத்துல ஏறாதீங்க... புதுச்சேரிக்கு தமிழகத்தை சேர்ந்த யாரும் உள்ளே வரக்கூடாது..! தவெக தலைமை உத்தரவு..!
ரூ.1020 கோடி கைமாறிய லஞ்சப்பணம்..! ஆதாரங்களுடன் சிக்கிய கே.என்.நேரு..! வேட்டையாடத் துடிக்கும் ED..!