அமமுக கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணையும்... தினகரன் சொல்வது தேமுதிகவையா?

Published : Mar 10, 2021, 01:10 PM IST
அமமுக கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணையும்... தினகரன் சொல்வது தேமுதிகவையா?

சுருக்கம்

தமிழகம் வெற்றி நடைபோடவில்லை, கடனில்தான் தள்ளாடுகிறது என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி. தினகரன் கூறியுள்ளார்.

தமிழகம் வெற்றி நடைபோடவில்லை, கடனில்தான் தள்ளாடுகிறது என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி. தினகரன் கூறியுள்ளார்.

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதிமுக 6 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு விட்டது. இதைத் தொடர்ந்து, இன்று காலை 15 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டார்.

இதனையடுத்து, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அமமுக தலைமை அலுவலகத்தில் டிடிவி.தினகரன் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- ஒரு சில கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடந்துக்கொண்டிருக்கிறது. அமமுக கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணையும். குடும்பத்தில் ஒருவருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கொண்ட தேர்தல் அறிக்கை விரைவில் வெளியிடப்படும் இருப்பதாகவும் தெரிவித்தார். 

தமிழகம் வெற்றி நடைபோடவில்லை, கடனில்தான் தள்ளாடுகிறது. ஏமாற்று அறிவிப்புகளை நம்பி மக்கள் வாக்களிக்கமாட்டார்கள். மேலும் சில கட்சிகள் இணையும் என டிடிவி தினகரன் சொல்வது தேமுதிகவையா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

PREV
click me!

Recommended Stories

எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!
இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!