டெல்லி சென்ற விமானத்தில் திடீர் அதிர்ச்சி.. ஒருமணி நேரம் திண்டாடிய மத்திய அமைச்சர்.. தவித்த 147 பயணிகள்.

By Ezhilarasan BabuFirst Published Mar 10, 2021, 12:54 PM IST
Highlights

விமானம் ஓடுபாதையில் ஓடத்தயாரானபோது விமானத்திலிருந்த பயணி சென்னை பெரம்பூரை சோ்ந்த  தயாளன் (64) என்பவருக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டு மயக்கம் ஏற்பட்டது.  

சென்னையில் இருந்து டெல்லி புறப்படும்போது, பயணிக்கு ஏற்பட்ட திடீா் மயக்கத்தால், மத்திய அமைச்சா் உட்பட 147 போ் பயணித்த விமானம் ஒரு மணி நேரம் தாமதமாக சென்றது. சென்னையிலிருந்து டில்லி செல்லும் ஏா்இந்தியா விமானம் இன்று காலை 6.10 மணிக்கு சென்னை விமானநிலையத்திலிருந்து புறப்பட்டது. விமானத்தில் மத்திய உள்துறை இணை அமைச்சா் கிஷன் ரெட்டி உட்பட 147  பயணிகள் இருந்தனா்.

  

விமானம் ஓடுபாதையில் ஓடத்தயாரானபோது விமானத்திலிருந்த பயணி சென்னை பெரம்பூரை சோ்ந்த  தயாளன் (64) என்பவருக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டு மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து விமானி விமான கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தாா். உடனடியாக விமானத்தின் கதவுகள் திறக்கப்பட்டன. விமானநிலைய மருத்துவ குழுவினா் விமானத்திற்குள் ஏறி அவரை பரிசோதித்து சிகிச்சை அளித்தனா். அதன்பின்பு அவா் மயக்கம் தெளிந்து எழுந்தாா். ஆனாலும் பயணி தான் தொடா்ந்து பயணம் செய்யவிரும்பவில்லை என்று கூறினாா்.

இதையடுத்து தயாளனின் பயணம் ரத்து செய்யப்பட்டு, விமானத்திலிருந்து கீழே இறக்கப்பட்டாா். அதன்பின்பு ஏா்இந்தியா விமானம் 146 பயணிகளுடன் காலை 7.05 மணிக்கு சென்னையிலிருந்து டில்லி புறப்பட்டு சென்றது. சென்னை விமானநிலையத்தில் பயணிக்கு ஏற்பட்ட திடீா் மயக்கம் காரணமாக மத்திய அமைச்சா் டில்லி செல்ல வேண்டிய ஏா்இந்தியா விமானம் சுமாா் ஒரு மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றார். இதனால் சென்னை விமானநிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
 

click me!