இந்த இளைஞர்தான் முதல்வர் வேட்பாளர்... எடப்பாடி- ஸ்டாலினின் கனவை பஸ்பமாக்க ரஜினி போடும் திட்டம்..!

By Thiraviaraj RMFirst Published Mar 12, 2020, 5:29 PM IST
Highlights

ரஜினிகாந்த் முன்னிலைப்படுத்த இருக்கும் முதல்வர் வேட்பாளர் கர்நாடகவில் பணியாற்றிய ஐபிஎஸ் அதிகாரி கரூரைச் சேர்ந்த அண்ணாமலை என்றும் இது ஒராண்டுக்கு முன்பே முடிவு செய்யப்பட்டு அதன் பின்தான் அண்ணாமலை தனது அரசுப் பதவியை ராஜினாமா செய்துள்ளதாக கூறப்படுகிறது.

தங்களது சுயநலத்துக்காக மட்டுமே பலரும் அரசியல்களத்திற்கு வரும் நிலையில், ரஜினி கணிக்க முடியாத சில புதுமைகளை புகுத்தி அரசியல் களத்தை அதிர வைக்க முடிவெடுத்துள்ளார்.  

 மக்களுக்கு சேவை செய்ய வேண்டும். அதே நேரத்தில் முதல்வர் பதவி வகிக்க மாட்டேன் என சபதமேற்றுள்ள அவர், முதல்வர் படித்த, அறிவாளியான, சுயநலமில்லாத, மக்கள் மீது பாசம் கொண்ட, தூய சிந்தனை கொண்ட 45 வயதுக்குட்பட்ட நிர்வாக திறமையுடைய இளைஞரை முதல்வர் வேட்பாளராக்க வேண்டும் என ரஜினிகாந்த் வெளிப்படையாகவே அறிவித்து இருந்தார்.

 

ஆனால், அவர் தான் முதல்வர் வேட்பாளர் அல்ல என்பதில் உறுதியாக உள்ள அதேவேளை முதல்வராகக் கூடிய அந்த இளைஞரை கிட்டத்தட்ட முடிவு செய்து விட்டார். அவர் ரஜினிக்கு ராசியாய் இருக்கக்கூடிய பெயரை தாங்கியுள்ள ஐபிஎஸ் அதிகாரியான அண்ணாமலை. கரூர் மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் இந்த அண்ணாமலை. சின்ன தாராபுரம் பகுதியை சேர்ந்தவர். 2011-ல் ஐ.பி.எஸ் அதிகாரியாக பணியில் இணைந்தவர். கர்நாடகாவில் கர்கலா பகுதியில் ஏ.எஸ்.பி.,யாக காவல்துறையில் பணியைத் தொடங்கி கடந்த 2013-ம் ஆண்டு உடுப்பி எஸ்.பி.,யாக பதவி உயர்வு பெற்றவர். 

உடுப்பி எஸ்.பி.,யாக இருந்தபோது இவரை அரசு பணியிடமாற்றம் செய்து உத்தரவிட்டதை எதிர்த்து அப்பகுதி மக்கள் பெரும் போராட்டங்களை நடத்தினர்.  அந்த அளவுக்கு மக்களின் நம்பிக்கையை பெற்றவர் இந்த அண்ணாமலை. தான் பணிபுரிந்த இடங்களில் அராஜாகங்களை ஒழிப்பதில் அதிரடி கட்டிய அண்ணாமலை மக்களோடு மக்களாக வலம் வந்தவர். கர்நாடக மக்கள் மத்தியில் நேர்மையான அதிகாரியாக அவர்களின் இதயங்களில் இடம் பிடித்தவர். ’கர்நாடக சிங்கம்’ என்று தான் அப்பகுதி மக்கள் இவரை அழைத்தனர்.

 தமிழகத்தைச் சேர்ந்த அண்ணாமலை பெங்களூரு தெற்கு பிராந்திய காவல்துறை துணை ஆணையராக பதவி வகித்து வந்தபோது தனது பதவியில் இருந்து விலகினார். இந்த திடீர் ராஜினாமாவுக்கு காரணம் அவர் அரசியலில் களமிறங்க முடிவு எடுத்ததாகக் கூறப்பட்டது.  கரூரைச் சேர்ந்த அண்ணாமலை தமிழக பாஜக தலைவராக நியமிக்கப்பட இருப்பதாக அப்போது பரபரப்பாக பேசப்பட்டது.  ஆனால், அண்ணாமலை தரப்பிலிருந்து எந்த தகவலும் வரவில்லை.

இந்த நிலையில் ரஜினிகாந்த் தனது மன்ற நிர்வாகிகளுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் வரவிருக்கும் 2011 சட்டமன்ற தேர்தலில் 65 சதவிகிதம் வேட்பாளர்கள் 48 வயது குறைந்தவர்களாக இருப்பார்கள் என்றும், மீதமுள்ள வேட்பாளர்கள் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் -ஐபிஎஸ், ஓய்வு பெற்ற நீதிபதிகளாக இருப்பார்கள் என்றும் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து தனது மன்ற நிர்வாகிகளிடம் கருத்து கேட்டபோது அவர்களும் ரஜினிகாந்த் முடிவிற்கு சம்மதம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. கட்சியும், ஆட்சியும் ஒரே ஆள் தலைமை ஏற்று நடத்த வாய்ப்பு அளிக்கக் கூடாது என தெரிவித்த ரஜினிகாந்த் தேசிய கட்சிகள் போலகட்சியை வழிநடத்த வேண்டும்.  ஆட்சியை வழிநடத்த அனுபவமுள்ள நேர்மையான ஒருவர் நியமிக்கப்படுவார் எனக்கூறியுள்ளார் ரஜினி. இந்த நிலையில் ரஜினிகாந்த் முன்னிலைப்படுத்த இருக்கும் முதல்வர் வேட்பாளர் கர்நாடகவில் பணியாற்றிய ஐபிஎஸ் அதிகாரி கரூரைச் சேர்ந்த அண்ணாமலை என்றும் இது ஒராண்டுக்கு முன்பே முடிவு செய்யப்பட்டு அதன் பின்தான் அண்ணாமலை தனது அரசுப் பதவியை ராஜினாமா செய்துள்ளதாக கூறப்படுகிறது. அரசு நிர்வாகம் குறித்தும் அரசியல் குறித்தும் ரஜினிகாந்த்  அவ்வப்போது அண்ணாமலையிடம் அடிக்கடி ஆலோசனை நடத்தியும் வந்துள்ளார். 

சத்தமே இல்லாமல் தமிழ்நாட்டில் இருக்கும் இரு திராவிட கட்சிகளுக்கும் அதிர்ச்சி அளிக்கும் விதத்தில் ரஜினிகாந்தின் ஆன்மீக அரசியல் அதிரடி காட்டப்போகிறது என்கிறார்கள் ரஜினி மக்கள் மன்றத்தினர். இப்படி ஒரு முடிவெடுத்தால் நிச்சயம் ரஜினிக்கு தமிழக மக்கள் பேராதரவு தருவது உறுதி என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள். 

click me!