எங்க கட்சியில் வந்து சேர்ந்துடுங்க... ரஜினிக்கு பாஜக திடீர் அழைப்பு..!

By vinoth kumarFirst Published Mar 12, 2020, 5:22 PM IST
Highlights

நடிகர் ரஜினிகாந்தின் கருத்து குறித்து பாஜகவின் பொன்.ராதாகிருஷ்ணன் கூறுகையில்;- ரஜினிகாந்த் ஆதரவு கொடுத்து ஏற்கனவே ஒருவரை முதலமைச்சர் ஆக்கினார். 1996-ம் ஆண்டு ரஜினிகாந்த் செய்த தவறு திமுகவை மீண்டும் ஆட்சியில் உக்கார வைத்தது.

நடிகர் ரஜினிகாந்த் பாஜகவில் இணைய வேண்டும் என்பதே அனைவரது விருப்பம். ஆனால், அவர் தனிக்கட்சி என்று கூறும்போது இந்த தருணம் சரியாக இருக்காது என முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். 

இன்று சென்னை லீலா பேலஸ்சில் நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில்;- குறிப்பாக கட்சி தொடங்கினால் தான் பின்பற்றப்போகும் வழிமுறைகள் குறித்து விளக்கம் அளித்தார். அதில், முதல்வர் பதவியை நான் நினைத்துக் கூட பார்க்கவில்லை. சட்டமன்றம் போய், முதலமைச்சராக கேள்விக்கு பதில் சொல்ல நினைத்தது இல்லை. முதலமைச்சராக வேண்டும் என்ற எண்ணம் எப்போதும் எனக்கு இருந்தது கிடையாது. கட்சி தலைவராக இருக்கவேண்டும் என்பதே என் விருப்பம். 

மேலும், இளைஞர்களிடம் எழுச்சி ஏற்பட்ட பிறகுதான் நான் அரசியலுக்கு வருவேன். நான் வருங்கால முதல்வர் என கூறுவதை ரசிகர்கள் முதலில் நிறுத்த வேண்டும். இளைஞர்கள் மத்தியில் எழுச்சி அலை உருவாக வேண்டும். அவ்வாறு உருவானால் அசுர பலமுடைய கட்சிகள் தோற்கும். படித்த தொலைநோக்கு சிந்தனை கொண்ட இளைஞரை முதலமைச்சராக்க வேண்டும் என்று கூறினார்.

இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்தின் கருத்து குறித்து பாஜகவின் பொன்.ராதாகிருஷ்ணன் கூறுகையில்;- ரஜினிகாந்த் ஆதரவு கொடுத்து ஏற்கனவே ஒருவரை முதலமைச்சர் ஆக்கினார். 1996-ம் ஆண்டு ரஜினிகாந்த் செய்த தவறு திமுகவை மீண்டும் ஆட்சியில் உக்கார வைத்தது. ரஜினிகாந்த் பாஜகவில் இணைய வேண்டும் என்பதே அனைவரது விருப்பமும். ஆனால் அவர் தனிக்கட்சி என்று கூறும்போது இந்த தருணம் சரியாக இருக்காது. பிரசாந்த் கிஷோர் ஏறிச் செல்லும் வாகனம் நான்கு சக்கரம் இல்லாதது என்று பொன்.ராதாகிருஷ்ணன் விமர்சனம் செய்துள்ளார். 

click me!