கலெக்டர் ஆபிஸ் எதிரில் இலவச சிக்கன் பிரியாணி...!! விழுப்புரத்தில் முந்தியடித்த கூட்டம்...!!

Published : Mar 12, 2020, 05:03 PM IST
கலெக்டர் ஆபிஸ் எதிரில் இலவச சிக்கன் பிரியாணி...!! விழுப்புரத்தில் முந்தியடித்த கூட்டம்...!!

சுருக்கம்

இன்று காலை விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் எதிரில் சிக்கன் பிரியாணி சமைத்து அதை பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கினார் .  பிரியாணி இலவசமாக வழங்கப்படுவதை  அறிந்து ஏராளமான மக்கள் அங்கு திரண்டனர் . 

சிக்கன் சாப்பிட்டால் கொரோனா பரவும் என்ற பீதியில் உள்ள மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் பொதுமக்களுக்கு பிரியாணி சமைத்து வழங்கப்பட்டது . கொரோனா அச்சத்தில்  பிராய்லர் கோழி விற்பனை கடுமையாக சரிந்துள்ளதையடுத்து கறிக்கோழி வளர்ப்போர் சங்கத்தின் சார்பில்  இலவசமாக பிரியாணி வழங்கப்பட்டுள்ளது.   சீனாவில் தோன்றிய கொரோனா  வைரஸ் சுமார் 100 க்கும் அதிகமான நாடுகளில் பரவியுள்ளது .  சீனாவில்  இதுவரை 3113 பேர் இந்த வைரசுக்கு உயிரிழந்துள்ளனர் . 

உலகம் முழுவதும் 4 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர் ,  தற்போது இந்தியாவில் வேகமாக பரவி  வருகிறது இந்நிலையில் 70க்கும் மேற்பட்டோர் வைரஸ்  தாக்குதலால் அவதிப்பட்டு வருகின்றனர் .  நாடு முழுவதும் இந்த வைரஸை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள்  தீவிரப்படுத்தப்பட்டுள்ளது . இந்நிலையில்  வைரஸை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது . கை கழுவுவது குறித்து  பள்ளி ,  கல்லூரிகள்  மூலம் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் பிராய்லர் கோழி இறைச்சி சாப்பிடுவதால் கொரோனா வருவதாக சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவியுள்ளது.   இதனால் கறிக்கோழி சாப்பிடுபவர்களின்  எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது .  பிராய்லர் இறைச்சி வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது . 

கறிக்கோழி விலையும் வீழ்ச்சி அடைந்துள்ளது .  எனவே சிக்கன்  சாப்பிடுவதால் கொரோனா  வைரஸ் பரவாது  என்ற விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்த முடிவு செய்த கறிக்கோழி வளர்ப்போர் சங்கத்தினர் ,  இன்று காலை விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் எதிரில் சிக்கன் பிரியாணி சமைத்து அதை பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கினார் .  பிரியாணி இலவசமாக வழங்கப்படுவதை  அறிந்து ஏராளமான மக்கள் அங்கு திரண்டனர் .  இலவச பிரியாணி வாங்க கூட்டம் அலைமோதியது இதுகுறித்து தெரிவித்த அச்சங்க நிர்வாகிகள் பிராய்லர் கோழி சாப்பிடுவதால்  கொரோனா வைரஸ் பரவாது என்பதை இலவச பிரியாணி வழங்கி  விழிப்புணர்வு ஏற்படுத்தியதாக கூறினர். 

PREV
click me!

Recommended Stories

சிபிஐ விசாரணை வளையத்தில் விஜய்.. நாளை என்ன நடக்கும்? டெல்லி போலீசிடம் உதவி கேட்ட தவெக!
ரத்தக் களரியான ஈரான்... காமெனிக்கு எதிராக போராட்டங்களை தூண்டிய டிரம்ப்.. உலுக்கும் 217 பேர் மரணம்..!