ஈரோடு கிழக்கு தொகுதியில் யார் போட்டியிடுவது என்பது குறித்து பாஜகவினர் ஓபிஎஸ் உடன் பேசி தான் முடிவு செய்வார்கள் என ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் யார் போட்டியிடுவது என்பது குறித்து பாஜகவினர் ஓபிஎஸ் உடன் பேசி தான் முடிவு செய்வார்கள் என ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார். இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக கூட்டணி கட்சியினர் போட்டியிட்ட 49 தொகுதியில் 40 தோல்வி கண்டனர். இந்த சூழலில் மீண்டும் தாமாக ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட கோரிகின்றனர். மீண்டும் ஒப்படைத்துவிட்டு ஈபிஎஸ் தப்பிவிட நினைக்கிறார். கொங்கு என்னுடையது எனக் கூறும் ஈபிஎஸ்க்கு சவால் விடுகிறேன்.
இதையும் படிங்க: மக்கள் மனமாற்றத்தில் உள்ளனர்; இடைத்தேர்தலில் வெற்றி எங்களுக்கு தான்: செங்கோட்டையன் நம்பிக்கை
undefined
எங்கள் ஆயுதம் பணம் இல்லை. ஆனால் எங்களின் ஆயுதம் ஓபிஎஸ் மட்டுமே. ஈரோட்டில் போட்டியிட நாங்கள் தயாராக உள்ளோம். ஓபிஎஸ் என்ன சொல்கிறார் என்பதற்காக காத்துள்ளோம். இரட்டை இலைக்குச் சொந்தக்காரர் ஓபிஎஸ் தான். பாஜகவினரும் ஓபிஎஸ் உடன் பேசி தான் ஈரோடு கிழக்கு தொகுதியில் யார் போட்டியிடுவது என்பது குறித்து முடிவு செய்வார்கள். துரோகம் செய்த பழனிச்சாமியை யாரும் ஏற்க மாட்டார்கள். தாமாக ஆறு சீட்டு வாங்கிச் சென்றும் தோற்றத்தான் போனார்கள். ஓபிஎஸ் தான் நல்லவர் என மக்கள் சொல்கிறார்கள்.
இதையும் படிங்க: விமானக் கதவை அவர் திறக்கவில்லை... தேஜஸ்வி சூர்யா மீதான குற்றச்சாட்டுக்கு அண்ணாமலை விளக்கம்!!
சொந்த தொகுதியில் தோற்று அரசியல் அனாதையானவர் ஜெயக்குமார். ஜெயக்குமாருக்கு கருத்து சொல்ல உரிமை இல்லை. அதிமுக என்பது பார்லிமென்டில் இருப்பதே ஓபிஎஸ் மகன் வெற்றி பெற்றதால் மட்டுமே. திரை மறைவில் அதிமுகவை ஒழிக்க இபிஎஸ் திட்டமிட்டுள்ளார். ஓபிஎஸ் பதவிக்கு ஆசைப்பட்டார் என நிரூபித்தால் நான் அரசியலையே பேசமாட்டேன். பழனிச்சாமி என்ற சர்வாதிகாரி ஒழிய வேண்டும் அதற்காகத்தான். சுய புக்தி இல்லாதவர் எடப்பாடி பழனிச்சாமி என்று தெரிவித்தார்.