விமானக் கதவை அவர் திறக்கவில்லை... தேஜஸ்வி சூர்யா மீதான குற்றச்சாட்டுக்கு அண்ணாமலை விளக்கம்!!

Published : Jan 19, 2023, 09:55 PM IST
விமானக் கதவை அவர் திறக்கவில்லை... தேஜஸ்வி சூர்யா மீதான குற்றச்சாட்டுக்கு அண்ணாமலை விளக்கம்!!

சுருக்கம்

விமானத்தின் அவசர கதவை பாஜக எம்.பி. தேஜஸ்வி சூர்யா திறக்கவில்லை என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 

விமானத்தின் அவசர கதவை பாஜக எம்.பி. தேஜஸ்வி சூர்யா திறக்கவில்லை என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னையில் இருந்து கடந்த 10 ஆம் தேதி திருச்சிக்கு சென்ற இண்டிகோ விமானத்தில் பாஜக எம்.பி தேஜஸ்வி சூர்யாவும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் பயணித்துள்ளனர். அப்போது பாஜக எம்.பி தேஜஸ்வி சூர்யா விமானத்தின் அவசரக்கால கதவைத் திறந்ததாக கூறப்பட்டது. இதனால் பயணிகள் கீழே இறக்கப்பட்டு, விமானத்தில் உரிய பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் காரணமாக காலை 10.05 மணிக்கு புறப்பட வேண்டிய விமானம் 142 நிமிடங்கள் தாமதமாக புறப்பட்டது. இது பெரும் சர்ச்சையானது.

இதையும் படிங்க: ரூ.4000 கோடியில் 10,000 கி.மீ சாலைகள் சீரமைக்கப்படும்... முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!!

இதனிடையே மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, விமானத்தில் எமர்ஜென்சி கதவை திறந்தது பாஜக எம்.பி. தேஜஸ்வி சூர்யா. அவர் தவறுதலாக அவசரகால கதவை திறந்து விட்டார். இந்த தகவலை விமானியிடம், கூறி தேஜஸ்வி மன்னிப்பும் கேட்டுக்கொண்டதாக நினைக்கிறேன். உடனடியாக அனைத்து நடைமுறைகளும் பின்பற்றப்பட்டு பரிசோதனைகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட்டன. அதன்பிறகுதான் விமானம் புறப்பட அனுமதி அளிக்கப்பட்டது. இந்த விவகாரம் குறித்து சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகமும் விசாரணை நடத்தி, நிலைமையை தெளிவுபடுத்தியது என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: மக்கள் மனமாற்றத்தில் உள்ளனர்; இடைத்தேர்தலில் வெற்றி எங்களுக்கு தான்: செங்கோட்டையன் நம்பிக்கை

இந்த நிலையில், தேஜஸ்வி சூர்யா விமானத்தின் அவசர கதவை திறக்கவில்லை என்று தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் பேசுகையில், தேஜஸ்வி சூர்யா படித்தவர். விமானத்தின் அவசர கதவை திறக்க வேண்டிய அவசரம் அவருக்கு இல்லை. கதவில் இருந்த இடைவெளியை பார்த்தததும் விமானப் பணியாளர்களை அழைத்துக் கூறினார். இதை நானும் பார்த்தேன். அவர் தவறு செய்யவில்லை என்றாலும் அவர் எம்.பி என்ற பொறுப்பில் இருப்பதால் மன்னிப்பு கோரினார் என்று தெரிவித்தார். 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஸ்டாலின் ரெடியாக இருங்க.. அடுத்த டார்கெட் தமிழ்நாடு தான்.. பிரதமர் மோடி மண்ணில் அமித்ஷா சபதம்!
ரூ.1,020 கோடி ஊழல்? ED-க்கும், பாஜகவுக்கும் அஞ்ச மாட்டோம்.. கே.என்.நேரு விளக்கம்!