மக்கள் மனமாற்றத்தில் உள்ளனர்; இடைத்தேர்தலில் வெற்றி எங்களுக்கு தான்: செங்கோட்டையன் நம்பிக்கை

Published : Jan 19, 2023, 05:36 PM IST
மக்கள் மனமாற்றத்தில் உள்ளனர்; இடைத்தேர்தலில் வெற்றி எங்களுக்கு தான்: செங்கோட்டையன் நம்பிக்கை

சுருக்கம்

மக்கள் மனமாற்றத்தில் இருப்பதால் ஈரோடு கிழக்கு தொகுதியில் நடைபெறவுள்ள சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக தான் வெற்றி பெறும் என்று முன்னாள் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கோபிசெட்டிபாளையத்தை அடுத்த அந்தியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கவுந்தப்பாடி புதூரில் நடைபெற்ற எம்ஜிஆர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு தொண்டர்களிடையே உரையாற்றினார்.

சிவகாசி பட்டாசு ஆலையில் வெடி விபத்து; ஒருவர் பலி, ஒருவர் படுகாயம்

அதனைதொடர்ந்து நடைபெற்ற செய்தியார் சந்திப்பில் அவர் பேசியதாவது, மக்கள் மனமாற்றத்துடன் இருப்பதால் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் அதிமுக கூட்டனி வெற்றி பெறும். ஈரோடு தொகுதியில் போட்டியிடுவது குறித்து கூட்டணிக் கட்சி தலைவர்களுடன்  கழகத்தின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசிய பின்  விரைவில் முடிவினை அறிவிப்பார். 

கஞ்சா போதையில் லாரி ஓட்டுநர் வெட்டி படுகொலை; போலீசார் வலைவீச்சு

ஓபிஎஸ் அணியை சேர்ந்த புகழேந்தி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கர்நாடக மாநிலத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில்  போட்டியிட்டு டெபாசிட் கூட வாங்கவில்லை. அதைத்தான் இப்போது  சொல்லிக் கொண்டு இருக்கிறார் என்று விமர்சித்துள்ளார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஜனநாயகன் தயாரிப்பாளருக்கு முக்கிய அரசு பதவி! விஜய் முடிவின் பின்னணி இதுதான்! பரபரப்பு தகவல்!
Government scheme: பெண் குழந்தைகளுக்கு அரசு தரும் ரூ.50,000.! யாருக்கெல்லாம் கிடைக்கும் தெரியுமா?