டிவிட்டரில் பதவியை மாற்றிய எடப்பாடி பழனிசாமி… அதிமுக பொதுக்குழுவுக்கு பின் அதிரடி!!

Published : Jul 11, 2022, 07:12 PM IST
 டிவிட்டரில் பதவியை மாற்றிய எடப்பாடி பழனிசாமி… அதிமுக பொதுக்குழுவுக்கு பின் அதிரடி!!

சுருக்கம்

அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் தனது டிவிட்டர் பக்கத்தில் பதவியை இடைக்கால பொதுச்செயலாளர் என்று எடப்பாடி பழனிசாமி மாற்றியுள்ளார். 

அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் தனது டிவிட்டர் பக்கத்தில் பதவியை இடைக்கால பொதுச்செயலாளர் என்று எடப்பாடி பழனிசாமி மாற்றியுள்ளார். அதிமுக ஒற்றத் தலைமை விவகாரம் பெரும் பிரச்சனையாக மாறியது. இதை அடுத்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆயோர் இடையே அதிகார மோதல் ஏற்பட்டது. இதனிடையே ஜூலை  11 (இன்று) அதிமுக பொதுக்குழு கூட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. பொதுக்குழுவை கூட்டி ஒற்றை தலைமை தீர்மானத்தை கொண்டு வந்து பொது செயலாளர் பதவியை கைப்பற்றி விடலாம் என்ற எண்ணத்தில் எடப்பாடி அணியினர் எண்ணினர். அதேநேரத்தில் ஒருங்கிணைப்பாளர் இல்லாமல் நடத்தப்படும் பொதுக்குழு சட்டப்படி செல்லாது. அதில் நிறைவேற்றப்படும் எந்த தீர்மானமும் செல்லாது. பொதுக்குழுவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று ஓபிஎஸ் தரப்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ஓ.பன்னீர்செல்வத்துக்கு நாங்க உதவி செஞ்சிருப்போம்.. அமைச்சர் மா.சுப்பிரமணியன் சொன்ன சீக்ரெட்

அதே நேரத்தில் பொதுக்குழுவுக்கு அனுமதிக்க வேண்டும் என்று எடப்பாடி தரப்பினரும் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர். இந்த வழக்கில் ஜூலை 11ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்திருந்தது. அதன் படி, இன்று சென்னை உயர்நீதிமன்றம், அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டது. மேலும், உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு உட்பட்டு, கட்சியின் சட்ட விதிமுறைகளை பின்பற்றி பொதுக்குழு கூட்டத்தை நடத்திக் கொள்ளலாம் என்றும், விதிகள் மீறப்பட்டால் நீதிமன்றத்தை நாடலாம் என்றும் தெரிவித்தது. இதை அடுத்து அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் திட்டமிட்டபடி நடைபெற்றது.

இதையும் படிங்க: அதிமுக தற்காலிக பொதுச் செயலாளராக ஈபிஎஸ் தேர்வானதன் எதிரொலி... அடித்து நொறுக்கப்படும் ஓபிஎஸ் உருவப்படங்கள்!!

இக்கூட்டத்தில் அதிமுக இரட்டை தலைமை பதவியை ரத்து செய்தும், அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை நடத்தவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்வு செய்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கூறி ஓ.பன்னீர்செல்வம், அவரது ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாகவே இன்று (ஜூலை 11) தனது ட்விட்டர் பக்கத்தில் இடைக்கால பொதுச்செயலாளர் என்று எடப்பாடி பழனிசாமி மாற்றியுள்ளார். ஏற்கனவே கடந்த ஜூலை 1 ஆம் தேதி தனது ட்விட்டர் பக்கத்தில் இணை ஒருங்கிணைப்பாளார் என்பதை தனது பழைய பதவியான தலைமை நிலையச் செயலாளர் என்று எடப்பாடி பழனிசாமி மாற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு அப்பாற்பட்டதா திமுக அரசு? விளாசும் இபிஎஸ்
100 பேர் கூட இல்லாத டாக்டர் ராமதாஸ் டெல்லி போராட்டம்..! ஒங்கும் அன்புமணி கை