அடுத்த ரெய்டு.. முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் உறவினர்கள் வீடுகளில் அமலாக்கத்துறையினர் சோதனை..!

First Published Dec 1, 2017, 11:13 AM IST
Highlights
ED raid on p chidhambara relatives house


ஏர்செல் மேக்சிஸ் முறைகேடு வழக்கு தொடர்பாக, முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் உறவினர்களின் வீடுகளில் அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனை நடத்திவருகின்றனர்.

2006-ம் ஆண்டு மத்திய நிதி அமைச்சராக இருந்த ப.சிதம்பரம், அப்போது ஏர்செல் நிறுவனத்தில் மேக்சிஸ் நிறுவனம் ரூ. 5,000 கோடியை முதலீடு செய்வதற்கு சட்ட விரோதமாக ஒப்புதல் அளித்ததாகக் கூறப்படுகிறது. ஏர்செல் - மேக்சிஸ் விவகாரம் தொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை தனித்தனியாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.

ஏர்செல் நிறுவனத்தில் மேக்சிஸ் நிறுவனம் முதலீடு செய்ய, வெளிநாட்டு முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தின் ஒப்புதல் பெறுவதற்காக, ‘அட்வான்டேஜ் ஸ்ட்ரேட்டஜிக் கன்சல்டிங்’ நிறுவனம் உதவி செய்துள்ளது. இதற்காக இந்த நிறுவனத்துக்கு ஒரு தொகை கட்டணமாக வழங்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் கார்த்தி சிதம்பரத்தின் பினாமி நிறுவனம் என்று கூறப்படுகிறது.

ஏர்செல் - மேக்சிஸ் முறைகேடு வழக்கில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை செய்தது தொடர்பாக, முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் உறவினர்கள் வீடுகளில் அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனை நடத்திவருகின்றனர்.

சென்னை, கொல்கத்தாவில் உள்ள ப.சிதம்பரத்தின் உறவினர்களின் வீடுகளில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்திவருகின்றனர்.
 

click me!