தல அரசியலுக்கு வந்தா ஒட்டு மொத்த தமிழ்நாடும் அவர் பின்னாடிதான்: கமிஷனர் தப்பா சொல்றார் பாஸ்! தப்பா சொல்றார்!

First Published Dec 1, 2017, 9:55 AM IST
Highlights
Mailsamy said tamilnadu youngers will follow Thala Ajith enter politics


தெற்கு, மேற்கு, வடக்கு என கிட்டத்தட்ட ஒட்டுமொத்த தமிழகத்தையும் குளிப்பாட்டிக் கொண்டிருக்கிறது நல் மழை! நேரம் ஐந்தாகி கடக்கும் சூழலில் ஜில்லென்ற மழைக்காற்றுக்கு இதமாக ஒரு கோப்பை லெமன் டீ மற்றும் சோயா சுண்டலுடன் இதோ ஏஸியாநெட் தமிழின் செய்தி துணுக்குகள்...

*    கடந்த முறை பணப்பட்டுவாடா புகாரால் ஆர்.கே.நகரில் தேர்தல் ரத்தானது. ஆனால் இப்போது மீண்டும் அதே வேட்பாளர்களே போட்டியிடுகின்றனர். எனவே பணப்பட்டுவாடா புகாருக்கு உள்ளானவர்கள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும்.
-    ரிட்டயர்டு அரசு அதிகாரி தேவசகாயம்.

*    கோயமுத்தூரில் ரகுவின் மரணத்துக்கு அலங்கார வளைவுதான் காரணம் எனச் சொல்வது சுத்த பொய். லாரியால்தான் விபத்து நடந்தது. நாங்கள் அனுமதி இல்லாமல் வளைவு வைத்தோம் என மாநகராட்சி கமிஷனர் தவறாக சொல்லியுள்ளார்.
-    அமைச்சர் எஸ்.பி.வேலுமணி.

*    எதிர்காலத்தில் நம் கட்சிக்கு எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் வெகுவாக இருப்பார்கள். நம்மை புறக்கணித்தவர்கள், ஏளனம் பேசியவர்கள், நண்பர்கள் போல் பழகி துரோகம் செய்தவர்களெல்லாம் விலாசம் தெரியாமல் போய்விட்டார்கள்.
-        த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன்.

*    சீமான் வரம்பு மீறிப்பேசுகிறார். எடுத்ததுக்கெல்லாம் ‘எங்கபாட்டன், எங்க முப்பாட்டன், எங்க மாமா’ என்று பெருமை பேசுகிறார். அப்படின்னா எங்களுக்கெல்லாம் பாட்டன், முப்பாட்டனெல்லாம் இல்லையா?
-        தமிழக பி.ஜே.பி. தலைவர் தமிழிசை.

*    கல்லூரி காலத்திலேயே நான் கார் ஓட்டியவன். என்னவோ இப்போதுதான் நான் காஸ்ட்லி கார்களில் போய் வருவது போல நான்காம் தர ஏடுகள் எழுதுகின்றன.
-    ம.நடராஜன்.

*    ரஜினி, கமல் அரசியலுக்கு வந்தால் தங்களது ஓட்டுகள் குறையும் எனும் கவலை அரசியல்வாதிகளுக்கு உள்ளது. ஆனால் ஒருவேளை அஜித் அரசியலுக்கு வந்து தனிக்கட்சி துவங்கினால், ஒட்டு மொத்த தமிழ்நாடும் தலயை நோக்கி போயிடும். 
-    நடிகர் மயில்சாமி.

*    தகுதி நீக்கம் செய்யப்படுவோமோ எனும் பயத்தில்  என்னிடம் சொல்லிவிட்டுதான் எம்.பி.க்கள் எடப்பாடி பக்கம் சென்றுள்ளனர். சின்னத்திற்கு இடைக்கால தடை வாங்கியதும் மீண்டும் இங்கு வந்துவிடுவர்.
-    டி.டி.வி. தினகரன்.

*    ஆர்.கே.நகர் தொகுதியில் எங்களுக்கு ஓட்டுப் போட்டால் மட்டுமே நல்லது நடக்கும் என்பது அந்த தொகுதி மக்களுக்கு நன்றாக தெரியும்.
-    அமைச்சர் செல்லூர் ராஜூ.

*    ஆந்திராவில் திருநங்கையருக்கு புதிய ஓய்வூதியத்திட்டத்தை அறிவித்திருக்கும் முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு எனது வாழ்த்துக்கள்.
-    தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின். 


*    எனக்கு இப்போதைக்கு ஒரேயொரு கனவு தான் உள்ளது. லால் சவுக்கில் வைட்த்து பரூக் அப்துல்லாவின் கன்னத்தில் ஓங்கி அறையவேண்டும் என்பதுதான் அது.
-    ஹரியான பி.ஜே.பி. வி.ஐ.பி. சூரஜ் பால் அமு 

click me!