நேர்த்திக் கடன் செலுத்த கோயில் கோயிலாக கிளம்பும் துர்கா ஸ்டாலின்..!

Published : May 08, 2021, 04:54 PM IST
நேர்த்திக் கடன் செலுத்த கோயில் கோயிலாக கிளம்பும் துர்கா ஸ்டாலின்..!

சுருக்கம்

முதல்வராக பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்ட போது,  அவரது மனைவி திருமதி துர்கா ஸ்டாலின் அவர்களின் கண்களில் கசிந்த இரண்டு கண்ணீர் துளியே சாட்சி.

40 வருடங்களுக்கும் மேலாக, எந்த அளவுக்கு உழைப்பு ஒன்றையே மூலதனமாக கொண்டு ஸ்டாலின் அவர்கள் முன்னேறியுள்ளார் என்பதற்கு,  கலைஞர் பெயரால் அவர் முதல்வராக பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்ட போது,  அவரது மனைவி திருமதி துர்கா ஸ்டாலின் அவர்களின் கண்களில் கசிந்த இரண்டு கண்ணீர் துளியே சாட்சி.

தேர்தலுக்கு முன் தி.மு.க., வெற்றி பெற்று, ஸ்டாலின் முதல்வராக, அவரோட மனைவி துர்கா, பல கோவில்களுக்கு போய், மனமுருக வேண்டிக் கொண்டார்.  வேண்டுதல் நிறைவேறினால், நேர்த்திக் கடனை நேரில் வந்து செலுத்துவதாக, ஒன்பது கோவில்களில் துர்கா வேண்டிக் கொண்டுள்ளார். இப்போது, ஸ்டாலின் முதல்வரானதால், நேர்த்தி கடனை செலுத்த, ராமேஸ்வரம் உட்பட ஒன்பது கோவில்களுக்கு மறுபடியும் துர்கா ஸ்டாலின் செல்ல இருக்கிறார். 

தன் சகோதரி ஒருவரை அழைத்துக் கொண்டு கோவில் கோவிலாக செல்ல இருக்கிறார். இந்நிலையில், முதல்வர் ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவிக்க 
திருமலை திருப்பதி கூடுதல் செயல் அலுவலர் ஏ.வி.தர்மாரெட்டி , பட்டாச்சார்யார்களுடன் சித்தரஞ்சன் சாலையில் உள்ள் துர்கா ஸ்டாலின் வீட்டிற்கு வந்து வந்து பிரசாதம் வழங்கினார்.

PREV
click me!

Recommended Stories

டெல்லி பறந்த விஜய்.. நாளை சிபிஐ விசாரணை.. அவிழப்போகும் முடிச்சுகள்.. பரபரப்பு தகவல்!
ஓட்டு கேட்க எதுனாலும் சொல்லலாம்.. அதிமுகவை விமர்சித்த ராமதாஸ்.. யாருடன் கூட்டணி? முக்கிய அறிவிப்பு!