தப்புக்கணக்கு போடாதீங்க..?? தலைகாட்ட தொடங்கிவிட்டது கொரோனா 3வது அலை.. அலறும் ஐசிஎம்ஆர்.

By Ezhilarasan BabuFirst Published Aug 31, 2021, 9:47 AM IST
Highlights

இதனால் தளர்த்தப்பட்ட ஊரடங்கு சில மாநிலங்களில் மீண்டும் கடுமையாக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மூன்றாவது அலை இந்த ஆண்டின் இறுதியில் அதாவது, நவம்பர், டிசம்பர் மாதங்களில் ஏற்பட  வாய்ப்பு இருக்கும் என எச்சரிக்கப்பட்டு வருகிறது. 

நாட்டில் ஒரு சில மாநிலங்களில் கொரோனா மூன்றாவது அலை தொடங்கி விட்டதற்கான அறிகுறிகள் தென்படுவதாக ஐசிஎம்ஆர் அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் இரண்டாவது அலை நாடு முழுவதும் பரவி அதிக அளவில் உயிரிழப்புகளை ஏற்படுத்திய நிலையில், பல்வேறு நோய் தடுப்பு நடவடிக்கைகள் மூலம் அது கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. ஆனால்  தற்போது கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் அதன் தாக்கம் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் தளர்த்தப்பட்ட ஊரடங்கு சில மாநிலங்களில் மீண்டும் கடுமையாக்கப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் மூன்றாவது அலை இந்த ஆண்டின் இறுதியில் அதாவது, நவம்பர், டிசம்பர் மாதங்களில் ஏற்பட  வாய்ப்பு இருக்கும் என எச்சரிக்கப்பட்டு வருகிறது. ஆனால் அதற்கு மாறாக 3வது அலையில் தாக்கம் இப்போதே தொடங்கி விட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஐசிஎம்ஆர் மருத்துவர் சமீரான் பாண்டா, கொரோனா வைரஸ் மூன்றாவது அலை ஏற்படுவதற்கு இன்னும் இரண்டு மூன்று  மாத காலங்கள் ஆகும் என நாம் எண்ணக்கூடாது, ஆனால் தற்போது அதன் தாக்கம் தொடங்கிவிட்டது என்பதற்கான அறிகுறி களை நாம் காண்கிறோம். குறிப்பாக வரவிருக்கும் காலம் பண்டிகை காலம் என்பதால் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முறையாக கையாள வேண்டும்.

ஏனென்றால் பண்டிகை காலங்களில் மக்கள் அதிக கூட்டம் கூடும்  பட்சத்தில், அது கொரோனா மையங்களாக மாறக்கூடும், பண்டிகைகள் சூப்பர் ஸ்ப்பிரட்டர் நிகழ்வுகளாக மாறக்கூடும், குறிப்பாக இரண்டாவது அலையை காட்டிலும் மூன்றாவது அலை சிறுவர்களை வெகுவாக தாக்கக்கூடும் என எச்சரிக்கப்பட்டு வரும் நிலையில், அதற்கான முன்னேற்பாடுகள் எடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் பாதிப்பு என்பது இரண்டாவது அலைக் காட்டிலும் குறைவாகவே இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார். இந்த அலையில் இருந்து தப்பிக்க தடுப்பூசி மட்டுமே சிறந்த ஆயுதம் என்றும் அவர் கூறியுள்ளார். இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழக மருத்துவரின் இந்த கருத்து, நாடு முழுவதும் எச்சரிக்கை உணர்வை ஏற்படுத்தியுள்ளது. 

 

click me!