மின்கம்பத்தில் மோதி கார் விபத்து... திமுக எம்எல்ஏ மகன் உள்பட 7 பேர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழப்பு.!

Published : Aug 31, 2021, 09:31 AM ISTUpdated : Aug 31, 2021, 09:33 AM IST
மின்கம்பத்தில் மோதி கார் விபத்து... திமுக எம்எல்ஏ மகன் உள்பட 7 பேர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழப்பு.!

சுருக்கம்

பெங்களூரு கோரமங்களா என்ற இடத்தில் நள்ளிரவு ஒரு மணியளவில் ஆடிகார் ஒன்று அதிகவேகமாக சென்றுக்கொண்டிருந்தது. அப்போது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையின் நடுவே இருந்த மின்கம்பத்தில் பங்கரமாக மோதியது.

பெங்களூருவில் சொகுசு கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பத்தில் மோதிய விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஓசூர் திமுக எம்எல்ஏ பிரகாஷின் மகன் உள்பட 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

பெங்களூரு கோரமங்களா என்ற இடத்தில் நள்ளிரவு ஒரு மணியளவில் ஆடிகார் ஒன்று அதிகவேகமாக சென்றுக்கொண்டிருந்தது. அப்போது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையின் நடுவே இருந்த மின்கம்பத்தில் பங்கரமாக மோதியது. இந்த காரில் பயணம் செய்த ஓசூர் திமுக எம்எல்ஏ பிரகாஷின் மகன் உட்பட 7 பேர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர். 

இந்த காரை ஓட்டிச்சென்றது  ஓசூர் திமுக எம்எல்ஏ பிரகாஷின் மகன் கருணாசாகர் என்பது தெரியவந்துள்ளது. விபத்து தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த 7 பேரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து தொட்பாக ஆடுகுடி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தில் 4 ஆண்களும், 3 பெண்களும் உயிரிழந்தது தெரியவந்துள்ளது. 

PREV
click me!

Recommended Stories

ஆபரேஷன் சிந்தூரின் முதல் நாளிலேயே பாகிஸ்தானிடம் அடி வாங்கியது இந்தியா..! காங்கிரஸ் தலைவர் சர்ச்சை பேச்சு..!
சமத்துவப் பாட்டன் பாரதி..! சாதிவெறி ஐயா ஈவேரா..! அதிர வைக்கும் நாம் தமிழர் கருத்தரங்கம் போஸ்டர்