
ரஜினியின் அரசியல் பிரவேசம் அரசியல் கட்சிகளுக்கு பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. என்னதால் அரசியல் கட்சி அறிவிப்பு என இருந்தாலும் உற்சாகம் குறைந்தவராகக் காணப்படுகிறார் ரஜினி.
கட்சி அறிவிப்பிற்கு பின் ரசிகர் மன்றங்களை இணைப்பது, வெப்சைட், மொபைல் ஆப் என அடுத்தடுத்த வேலைகளில் பிசியாக இருந்தாலும், ரஜினியின் ‘ஹெல்த்’ விவகாரம்தான் அவருக்கு இருக்கும் மிகப்பெரிய முட்டுக்கட்டை யாக இருக்கிறதாம்.
கடந்த 31-ம் தேதியன்று ‘நான் அரசியலுக்கு வருவேன். அடுத்த சட்டமன்ற தேர்தல் சமயத்தில் கட்சி துவங்கி, தனித்து போட்டியிடுவேன். அதுவரை போராட்டம், அரசியல் ஆர்பாட்டமெல்லாம் வேண்டாம். ’ ரஜினியின் இந்த அறிவிப்பால் ஏற்பட்ட அதிர்வலைகள் தான் மறுநாளே உறுப்பினர் சேர்க்கை குறித்த ஆப்! அறிவித்தவர் தொடர்ந்து மீடியாவை சந்தித்து அந்த ஹீட்டை அப்படியே தொடர வைத்தார். இதனையடுத்து நாளுக்கு நாள் ரஜினிக்கு கோடி கோடியாக கொட்ட அரசியல் தலைவர்கள், பிசினஸ் புள்ளிகள் என தயாராக உள்ளார்களாம்.
அரசியல் வருகைக்குப்பின் ஆலோசனைகள் வழங்குவதற்கு உயர் பொறுப்புக்களை வகிக்கும் அதிகாரிகள் என ஒரு கூட்டமே இருக்கிறதாம். ஒகே சொன்னதும் கட்சியில் சேர மாஜி அமைச்சர்கள் முதல் மாவட்ட பெரும் புள்ளிகள் வரை கார்த்திருக்கிரார்கள். அதேநேரத்தில், மத்திய அரசின் பூரண ஆசியும் இருக்கிறது. வேலை செய்ய ரசிகர்கள் இருக்கின்றனர். பொதுமக்களிடமும் ஆதரவு நிலை இருக்கிறது.
ஆனால், இவை அனைத்தையும் ஒருங்கிணைத்து தலைவனாகத் தமிழகம் முழுக்க வலம்வர ரஜினியின் உடல்நிலை நிச்சயம் ஒத்துழைக்காது என ரஜினிக்கு மருத்துவம் பார்க்கும் டாக்டர்கள் கூறுகிறார்களாம். ரஜினியின் உடல்நிலையில் மாற்றங்கள் மற்றும் கோளாறுகள் வெளிப்பட தொடங்கியது. தொடர் புகைப்பழக்கம், மது பழக்கத்தின் விளைவாக ரஜினியின் உடல்நிலையில் பல மாற்றங்கள் ஏற்பட்டது. அமெரிக்காவின் வர்ஜீனியா மாகாணத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, உறுப்பு மாற்று சிகிச்சையும் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. சிகிச்சை மேற்கொண்ட ரஜினி, மிகவும் கவனத்தோடும், உஷாராக இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனராம்.
குறிப்பாக மற்ற மனிதர்களிடம் உள்ள கிருமிகள் மற்றும் நோய்த்தொற்று தாக்காதவாறு, ரஜினி தன்னை பாதுகாத்துக் கொள்வது மிகுந்த அவசியமாக உள்ளது. எனவே, மருத்துவ காரணங்களாக கடந்த இரு முறை ரசிகர்களை சந்தித்த ரஜினிகாந்த், கைகொடுப்பதை தவிர்த்து வந்தார். அதுமட்டுமல்ல இப்போது அவர் நடத்திய ரசிகர்கள் சந்திப்பையே, அவருடைய உடல்நிலையைக் கவனித்துக் கொள்ளும் டாக்டர்கள் கடுமையாக எச்சரித்தார்களாம்.