சொத்துல மட்டும் பங்கு வேணுமா..? தீபா- தீபக்கை வழக்கில் சேர்த்த உயர்நீதிமன்றம்..!

By Thiraviaraj RMFirst Published Dec 6, 2021, 6:19 PM IST
Highlights

தீபக், தீபாவை வழக்கில் சேர்க்குமாறு வருமான வரித்துறைக்கு உத்தரவிட்டு விசாரணையை இரண்டு வாரம் தள்ளிவைத்தனர்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 2008, 2009ம் ஆண்டுக்கான வரிக்கணக்கை தாக்கல் செய்யாதது தொடர்பான வழக்கு அவரது வாரிசுகளான தீபக், தீபாவை சேர்க்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 கடந்த 2008,2009-ல் ஜெயலலிதா வருமான வரி தாக்கல் செய்யவில்லை என கூறி நோட்டிஸ் அனுப்பப்பட்டது. அதுகுறித்து ஜெயலலிதா தரப்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தை தொடர்ந்து, அவர் மீதான குற்றசாட்டில் இருந்து விடுவித்து வருமான வரித்துறை தீர்ப்பாயம் உத்தரவிட்டு இருந்தது. அந்த வரித்துறை தீர்ப்பாயம் உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வருமான வரித்துறை மேல்முறையிடு செய்தனர்.

இந்த வழக்கு நீண்ட காலமாக நிலுவையில் இருந்துவரும் நிலையில், இந்த வழக்கு இன்று மகாதேவன் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது,  ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு அவரது வாரிசுகளாக தீபக், தீபா அறிவிக்கப்பட்டுள்ளனர். இதனால், இந்த வழக்கில்  தீபக், தீபாவை சேர்க்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. 

தீபக், தீபாவை வழக்கில் சேர்க்குமாறு வருமான வரித்துறைக்கு உத்தரவிட்டு விசாரணையை இரண்டு வாரம் தள்ளிவைத்தனர்.

click me!