70 சீட்டில் இருந்து 7 சீட்டுக்கு தேய்ந்து போன கம்யூனிஸ்டு.. உங்கள மன்னிக்கவே கூடாது.?? பங்கம் செய்த ஆ.ராசா .

By Ezhilarasan BabuFirst Published Dec 6, 2021, 5:16 PM IST
Highlights

நான் இது குறித்து அவர்களுக்கு பல முறை எச்சரித்திருக்கிறேன். நான் 2ஜி வழக்கின் போது யெச்சூரி, பிருந்தா காரத் ஆகியோரிடம் இதில் தவறு ஏதும் நடக்கவில்லை நான் செய்தது புரட்சிதான், சற்று நிதானமாக படித்துப் பாருங்கள் என்று நான் கூறினேன். 

யாரை வேண்டுமானாலும் மன்னிக்கலாம் ஆனால் இந்த கம்யூனிஸ்டுகளை மட்டும் மன்னிக்கவே கூடாது என்று தான் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களிடமே கூறியதாகவும், 70 இடத்தில் இருந்த கம்யூனிஸ்டுகள் மெல்ல மெல்ல 7 இடங்களுக்கு தேய்ந்து போனதற்கு அவர்கள் பெரியாரை உள்வாக்க தவிறியதுதான் காரணம் என்றும் திமுக துணைப் பொதுச் செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா விமர்சித்துள்ளார். சென்னையில் நடந்து புத்தய வெளியாட்டு நிகழ்ச்சியில் அவர் இவ்வாறு பேசினார். 

ஆற்றல்மிக்க பேச்சாளரும் திமுகவின் சிறந்த நாடாளுமன்றவாதியாகவும் இருந்து வருகிறாரார் ஆ. ராசா, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைமையில் திமுக அங்கம் வகித்தபோது மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக பதவி வகித்தார் ஆ. ராசா, அதுதான் அனைத்து சாமானிய மக்களுக்கும் கைப்பேசி என்ற ஒன்று கிட்டியது காலம். அதுதான் தகவல்தொடர்பு துறையில் சாதனை என்றும் பலராலும் வர்ணிக்கப்பட்டது. இது தகவல் தொடர்புத் துறையில் புரட்சியாகவே பார்க்கப்பட்டது. ஆனால் அந்த புரட்சிக்குப் பின்னர் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்ததில் இமாலய ஊழல் நடந்ததாக பகீர் குற்றச்சாட்டு அப்போது எழுந்தது. அதாவது 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு நடந்ததாகவும் மத்திய கணக்கு தணிக்கை அதிகாரியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. அதனால் 1.76 லட்சம் கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்பட்டதாகவும் அப்போது கூறப்பட்டது. இது அப்போதைய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சரான ராசாவுக்கு புரியாத பேரிடியாக விழுந்தது. பின்னர் இது குறித்து எதிர்க்கட்சி, ஆளும் கட்சி என இரண்டு தரப்பினரும் அரசவை குறிவைத்து விமர்சித்தனர்.

கம்யூனிஸ்டுகளும் தங்களது பங்குக்கு இந்த ஊழலுக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என முழங்கினர். பின்னர் இதுகுறித்து சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரித்தது. 2011-ம் ஆண்டில் டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஓ.பி சைனி தலைமையில் விசாரணை தொடங்கியது. கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகளுக்கு மேலாக வழக்கு நீண்டது, ஏப்ரல் 19 -2017 அனைத்து வாதங்களும் நிறைவடைந்தன. பின்னர் டிசம்பர் 21 ஆம் தேதி தீர்ப்பு வெளியானது. அதில் 2ஜி வழக்கில் இருந்து ஆ. ராசா கனிமொழி உள்ளிட்ட அனைவரும் விடுவித்து நீதிபதி உத்தரவிட்டார் அதாவது குற்றச்சாட்டுகளை சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்க சிபிஐ தவறிவிட்டதால் ராசா உள்ளிட்ட 14 பேரை விடுவிப்பதாக நீதிபதி அறிவித்தார். இந்த விவகாரத்தில் ராசாவுக்கு எதிரான குற்றச்சாட்டுகளில் உண்மை இல்லை என்பது வெளிச்சத்திற்கு வந்தது. பின்னர் தான் செய்தது புரட்சியே என்று தான் ஆரம்பத்தில் இருந்தே கூறி வருகிறேன் என்றும்,  தன்னை சிக்க வைக்க வேண்டும் என்பதற்காகவே திட்டமிட்டு தனக்கு எதிராக இந்த வழக்கு புனையப்பட்டது என்றும் ஆ.ராசா அப்போது கூறினார்.

இந்நிலையில் சென்னையில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய அவர், கம்யூனிஸ்ட் கட்சிகளை மிகக் கடுமையாக விமர்சித்தார். 70 இடங்களில் இருந்த கம்யூனிஸ்ட் கட்சி  இன்று வெறும் ஏழு இடங்களுக்கு தேய்ந்து போய் இருக்கிறது என்றும் அதற்கான பல்வேறு காரணங்களையும் அவர் விளக்கினார். இந்தியாவிற்கு அடிக்கப்பட்டுவரும் காவி  வண்ணத்தால்  ஆபத்து சூழ்ந்துள்ளது. அந்த ஆபத்தை தடுக்க கூடிய ஒரே மருந்து பெரியாரிடம் தான் உள்ளது. இதை இந்தியாவிற்கே சொல்ல வேண்டிய கடமை நமக்கு உள்ளது. அம்பேத்கரையும் சொல்லலாம் ஆனால் இந்துத்துவாவாதிகள் அம்பேத்கரை விழுங்க முயற்சிக்கின்றனர். அம்பேத்கர் பேசிய இந்துத்துவா என்ற தலைப்புகளில் புத்தகங்களை அவர்கள் எழுதுகின்றனர். ஆனால் அவர்களால் நெருங்க முடியாத ஒரு தலைவர் இருக்கிறார் என்றால் அது பெரியார்தான். பெரியார் என்ற நெருப்பை காகிதத்தால் பொட்டலம் கட்ட முடியாது. இன்று கம்யூனிஸ்டுகள் பெரியாரை உள்வாங்க தவறியதால்தான் அவர்கள் இந்தியாவில் தேய்ந்து வருகிறார்கள். ஒரு காலத்தில் நேருவும், இந்திரா காந்தியும் கம்யூனிஸ்டுகள் என்ன  சொல்வார்கள் என்று அச்சத்துடன் இருப்பார்கள் ஆனால் இன்று  கம்யூனிஸ்டுகளில் நிலை தலைகீழாக மாறியுள்ளது. 75 சீட்டை விட்டு விட்டு இப்போது ஏழு சீட்டில் அமர்ந்துகொண்டு இருக்கிறார்கள். 

நான் இது குறித்து அவர்களுக்கு பல முறை எச்சரித்திருக்கிறேன். நான் 2ஜி வழக்கின் போது யெச்சூரி, பிருந்தா காரத் ஆகியோரிடம் இதில் தவறு ஏதும் நடக்கவில்லை நான் செய்தது புரட்சிதான், சற்று நிதானமாக படித்துப் பாருங்கள் என்று நான் கூறினேன். ஆனால் அவர்களின் அப்போது என் பேச்சை கேட்கவில்லை, அவர்களுடன் சேர்ந்துகொண்டு இவர்களும் எனக்கு எதிராக பிரச்சினை செய்தார்கள். பிறகு ஒருமுறை தலைவர் கலைஞர் அவர்களின் பிறந்த நாள் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வந்திருந்தார்கள். அப்போது என்னிடம் வழக்கு எப்படி சென்றது என்று கேட்டார்கள். பாஜகவினரை மன்னிக்கலாம், காங்கிரஸ் காரர்களையும் மன்னிக்கலாம், கம்யூனிஸ்டுகளை எப்படி மன்னிக்க முடியும் என்று கேட்டேன். அப்போது நான் உங்களிடம் கூறினேன், தவறு ஏதும் நடக்கவில்லை, நான் செய்தது புரட்சி என்றேன், பரவாயில்லை தீர்ப்பு வரும் வரை காத்திருங்கள் என்று பதில் கூறினேன். பின்னர் நான் விடுதலையான பிறகு நாங்கள் தான் தவறு செய்து விட்டோம் எங்களை மன்னித்து விடுங்கள் என்று என்னிடம் வருந்தினார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
 

click me!