இந்து மதம் இருக்கும் வரை.. அரை அடி சாமி சிலை இருக்கும் வரை.. இந்த கட்சி இங்கு வளராது.. போட்டு பொளந்த ஆ.ராசா.

By Ezhilarasan BabuFirst Published Dec 6, 2021, 5:54 PM IST
Highlights

தமிழுருக்காகவும், தமிழுக்காகவும் வாழ்ந்த பெரியாரை இப்போது வலதுசாரி தமிழ் தேசியவாதிகள் யேசுகிறாரகள் மாற்றம் வரவேண்டும் என்று எதிர்பார்ப்பவர்கள் தான் இடதுசாரிகள், மாற்றமே வரக்கூடாது என்று சொல்பவர்கள்தான் வலதுசாரிகள், ஆன்மிகத்திலும் பக்தியிலும் தமிழ் விழுந்துவிட்டால் அதை சமூகத்தின் பக்கம் மடைமாற்றிவிட நாம் தவறிவிட்டால் பெரியாரை மறந்துவிடுவோம்.

இந்து மதம் இங்கு இருக்கும் வரை.. அரை அடி சாமி சிலை இருக்கும் வரை கம்யூனிஸ்ட் கட்சி இங்கு வளரவே வளராது என திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா கூறியுள்ளார். இதைத்தான் கூறவில்லை  திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் திவானாக இருந்த சி.பி ராமசாமியே கூறியிருக்கிறார் என அவர் மேற்கோள்காட்டியுள்ளார். மார்க்சியமும் பெரியாரும்,  திரும்பத் திரும்ப திராவிடம் பேசுவோம், பெரியாரின் இடதுசாரி தமிழ் தேசியம் என்ற நூல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது அதில் திமுக துணைப் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர்,

இன்றைக்கு இந்தியாவிற்கு அடிக்கப்பட்டு இருக்கிற காவி வண்ணத்தால், ஒரு ஆபத்து சூழ்ந்துள்ளது. இந்த ஆபத்தை தடுக்க கூடிய ஒரே மருந்து பெரியார்தான். இதை நாம் இந்தியாவிற்கு சொல்ல வேண்டிய கடமை உள்ளது. அம்பேத்கரை சொல்லலாம் ஆனால் இந்துத்துவாவின் அம்பேத்கர் என்றே அவர்கள் புத்தகம் எழுத ஆரம்பித்துவிட்டார்கள். அம்பேத்கரை அவர்களின் கிரகித்துக் கொள்ள முயற்சி செய்கிறார்கள். ஆனால் பெரியார் அப்படி அவர்களால் நெருங்கமுடியாது. நெருப்பை காகிதத்தில் பொட்டலம் கட்ட முடியாது அல்லவா அப்படித்தான் பெரியார் உள்ளார். அம்பேத்கர் ஏன் இஸ்லாத்துக்கு போகவில்லை.. ஏன் கிறித்துவதற்கு போகவில்லை? இந்த நாட்டில் தோன்றிய ஒரு மதமான இந்து மதத்திற்கு நெருக்கமாக உள்ள பௌத்தத்தைதான் அவன் தழுவினார் என்கிற அளவிற்கு அவர் பேசுகிறார்கள். 

திராவிட இயக்கம் 100 ஆண்டுகளில் செய்த சாதனை நிச்சயம் நாம் பட்டியலிட்டு தொகுக்க வேண்டியது அவசியம் உள்ளது என்ற அவர். அதற்கு முன்பாக மதவாதிகளால், காவி அரசியல்வாதிகளால் இந்தியாவினுடைய அரசியல் தன்மை எந்த அளவிற்கு மாறி இருக்கிறது என்பதை கவனிக்க வேண்டும். நீதித்துறை கூட சுதந்திரமாக இயங்குகிறதா என்று சந்தேகப்படும் அளவிற்கு செய்து வைத்திருக்கிறார்கள். ஒருகாலத்தில் இடதுசாரிகள் என்ன சொல்லுகிறார்கள் என்று நேருவும் இந்திரா காந்தியும் அச்சப்படும் நிலை இருந்தது. ஆனால் இன்று அந்த கம்யூனிஸ்ட் இயக்கங்கள் தேய்ந்து போயிருக்கின்றன. 70 இடங்களில் இருந்த கம்யூனிஸ்டுகள் இன்று 7 இடங்களாக குறைந்து போய் இருக்கிறார்கள். அவர்கள் இந்த அளவுக்கு தேய்ந்து போனதற்கு காரணம் அவர்களும் ஒரு கட்டத்தில் பெரியாரை உள்வாங்க தவறிவிட்டார்கள் என்பதுதான். எனவே பெரியாரை நுட்பமாக ஆராய வேண்டிய இடத்தில் நாம் இருக்கிறோம். இதில் மிக முக்கியமான புத்தகம் பேராசிரியர் சுப வீரபாண்டியன் எழுதிய இடதுசாரி தமிழ் தேசியம் படிப்பது அவசியம் என்றார், பெரியார் தமிழை காட்டுமிராண்டி பாஷை என்று சொன்னதாக பேசிக்கொண்டு இருக்கிறார்கள். சிலர் நீசபாசை என்று தமிழை சொன்னார்களே அதையெல்லாம் மறந்துவிட்டு இப்போது பெரியாரை மட்டும் பிடித்து விமர்சித்துக் கொண்டிருக்கிறார்கள்.

எதற்காக பெரியார் தமிழை காட்டுமிராண்டி மொழி என்றார். 1984 இல் மத்திய அரசு சென்னையில் நடத்திய சமஸ்கிருத மாநாட்டில் மா. பொ. சி கலந்துகொண்டார். அதில் அவர் பேசிய பேச்சை அவரே தொகுத்திருக்கிறார். இந்தியன் என்கின்ற முறையில், இந்து என்கின்ற முறையில், நமது கலாச்சார மொழியாக இருப்பது சமஸ்கிருதம்தான் என்பதை நான் ஒப்புக் கொள்கிறேன். சமஸ்கிருதம்தான் இந்தியாவில் உள்ள எல்லா மொழிகளுக்கும் தாய் மொழி என்பது ஒப்புக் கொள்வதில் எனக்கு சங்கடம் இல்லை. தமிழ் பற்று காரணமாக அதை நாம் ஒதுக்கிவிட வேண்டிய அவசியமில்லை என்றார் மா.பொ.சி, இதை சொன்னது சாட்சாத் மா.பொ.சுதான் ஆனால் அவருக்கே கலைஞர் கருணாநிதி சிலை வைத்தார். ஆனால் இத்தனை வருஷம் கழித்து மீண்டும் ஒரு குரல் தமிழ் இந்து என ஒலிக்கிறது. மா பொ சி 1884ல் சொன்னதை  மெது மெதுவாக பொறுத்துப் பொறுத்து பார்த்து அடக்கமுடியாமல் சுபவீ போன்றவர்களை எல்லாம் மோதி பார்த்துவிட்டு, பிறகு அடக்கமுடியாமல் இப்போது தமிழ் இந்து என பேசத் தொடங்கி இருக்கிறார்கள். மா.பொ.சிக்கு வேண்டுமானால் கருணாநிதி அன்று சிலை வைத்திருக்கலாம், ஆனால் இப்போது இருப்பவர் ஸ்டாலின். இவர் மன்னிக்க மாட்டார். உங்களை அவர் மன்னிக்கவும் நாங்கள் விடமாட்டோம். உங்களுக்கு சிலை எல்லாம் வைக்க விடமாட்டோம். 

தமிழுருக்காகவும், தமிழுக்காகவும் வாழ்ந்த பெரியாரை இப்போது வலதுசாரி தமிழ் தேசியவாதிகள் யேசுகிறாரகள் மாற்றம் வரவேண்டும் என்று எதிர்பார்ப்பவர்கள் தான் இடதுசாரிகள், மாற்றமே வரக்கூடாது என்று சொல்பவர்கள்தான் வலதுசாரிகள், ஆன்மிகத்திலும் பக்தியிலும் தமிழ் விழுந்துவிட்டால் அதை சமூகத்தின் பக்கம் மடைமாற்றிவிட நாம் தவறிவிட்டால் பெரியாரை மறந்துவிடுவோம். பெரியாரை மறந்துவிட்டால் நம் தமிழினம் அழிந்துவிடும். அதனால்தான் ஆன்மீகத்தில் இருந்து பக்தியிலிருந்து தமிழை பிரித்து, அதை ஒரு அறிவியல் மொழியாக மாற்ற வேண்டும் என்று பெரியார் விரும்பினார். அதெல்லாம் இல்லாத போதுதான் அவர் அதை காட்டுமிராண்டி மொழி என்றார்.

அதேபோல கொளத்தூர் மணி எழுதிய தாஸ் கேப்பிட்டல் பெரியார் பிறப்பதற்கு ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பாகவே நாளை இந்தியா என்ற புத்தகத்தை எழுதிய கார்ல் மாக்ஸ்,  குரங்கையும், பசுவையும் வணங்குகிற காட்டுமிராண்டித்தனம் இருக்கிற வரை இந்தியாவில் புரட்சிக்கு வாய்ப்பே இல்லை என்று கூறினார். அதை மேற்கோள்காட்டிதான் கொளத்தூர் மணி தாஸ் கேப்பிட்டல் என்ற புத்தகத்தில் பிராமணர்களையும், பசுவையும் காப்பதற்கான சூத்திரன் உயிரை கொடுத்தால் அவனுக்கு மோட்சம் கிடைக்கும் என்று சொல்லியிருக்கிறது. இந்த அயோக்கியத்தனத்தை காரல்மார்க்ஸ் அன்றே சொல்லி இருக்கிறார். ஆனால் சிபிஎம்- சிபிஐக்கு இப்போதுதான் இது தெரிந்திருக்கிறது. அதனால்தான் 75 சீட்டை விட்டு விட்டு இப்போது 7 சீட்டில் அமர்ந்து கொண்டு இருக்கிறார்கள்.

2ஜி விசயத்திலேயே நான் கூறினேன், யெச்சூரியை பார்த்து சொன்னேன், எதுவும் தவறு நடக்கவில்லை என்று கொஞ்சம் நிதானமாக படித்து பாருங்கள் என்று நான் கூறினேன். ஆனால் இவர்களும் அவர்களுடன் சேர்ந்து கொண்டு கலாட்டா செய்தனர். பிறகு வழக்கு முடியும் தருவாயில் தலைவர் கருணாநிதி அவர்களுடைய பிறந்தநாள் நிகழ்ச்சிக்காக யெச்சூரி, பிருந்தா காரத் எல்லாம் வந்திருந்தார்கள். அப்போது வழக்கு எப்படி போனது என்று கேட்டார்கள், நான் அவர்களுக்குச் சொன்னேன் நான் ஏற்கனவே உங்களுக்கு சொல்லி இருக்கிறேன், நான் செய்தது புரட்சி என்றேன், ஆனால் நீங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை, பாஜகவை மன்னிக்கலாம், காங்கிரஸை மன்னிக்கலாம், கம்யூனிஸ்ட் மட்டும் மன்னிக்கவே கூடாது என்றேன், பிறகு நான் விடுதலை ஆனபிறகு நாங்கள் தான் தவறு செய்து விட்டோம் என்று என்னிடம் வருந்தினர்.

மார்க்சிய பார்வையில் பெரியாரைப் பார்க்க தவறியதால் என்று மார்க்சியம் அழிந்து வருகிறது. சி.பி ராமசாமி, திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் திவானாக இருந்தவர், இந்திய கவர்னர் ஜெனரல் சபையின் சட்ட உறுப்பினர்களில் ஒருவர், அவரிடம் கம்யூனிஸ்ட் வளருமா என்ன கேள்வி கேட்கப்பட்டது. அப்போது, இந்துமதம் இங்கே இருக்கும் வரைக்கும், அரையடி சாமி சிலை இருக்கும் வரைக்கும், கம்யூனிஸம் இந்தியாவில் வளராது. என்றார். இதற்குப் பிறகும் இந்துமதத்தை எதிர்க்கவில்லை என்றால், பிஜேபியை எதிர்க்கவில்லை என்றால், காவியை எதிர்க்க வில்லை என்றால், இங்கே எப்படி புரட்சி வரும். இப்போது மார்க்ஸியம், பெரியாரிசம், அம்பேத்கரியம் மூன்றும் இணைந்து செயல்பட வேண்டியது அவசியம் .இவ்வாறு அவ்ர பேசினார். 
 

click me!