டைட்டா ஜீன்ஸ் போடாத.. துப்பட்டா போடு.. தயவு செய்து வாய மூடு.. செ*** பற்றி கத்துகொடு.. ஆவேச சின்மயி.

By Ezhilarasan BabuFirst Published Nov 15, 2021, 4:52 PM IST
Highlights

சில குறிப்பிட்ட ஆண்வர்க்கம் பெண்கள் இந்த ஆடை உடுத்தக் கூடாது, அந்த ஆடை உடுத்த கூடாது என பேசுகின்றனர். நாங்கள் பாதுகாப்பு கேட்பதே அது போன்ற ஆண்களிடமிருந்து தான் என அவர் தெரிவித்துள்ளார்.

பாலியல் சீண்டல் என்பது பெண்களுக்கு மட்டும்  நடப்பது அல்ல, அதிக அளவில் ஆண் குழந்தைகளுக்கும் நடக்கிறது, அதை அவர்கள் வெளியில் சொல்ல முடியாத நிலை உள்ளது என்றும் பாடகி சின்மயி கூறியுள்ளார். எல்லாவற்றிலும் கலாச்சாரம், கலாச்சாரம் எனக்கூறி அனைத்தையும் மறைக்க முற்படுபவர்கள் தயவுசெய்து ஒதுங்கி இருங்கள், அதுவே பெண்களுக்கு பெரிய உதவியாக இருக்கும் என்று அவர் கூறியுள்ளார். 

"கவிஞர் வைரமுத்து  எழுதிய ஒரு தெய்வம் தந்த பூவே"  என்ற பாடலின் மூலம் திரைப் பயணத்தை தொடங்கியவர் சின்மயி, மணிரத்தினம் இயக்கிய கன்னத்தில் முத்தமிட்டால் திரைப்படத்தின் மூலம் அவர் அறிமுகமானார். தனது முதல் பாடலிலேயே சிறந்த பாடகி என்ற முத்திரையை பதித்தார் சின்மயி, அடுத்தடுத்து பல படங்களில் ஏ.ஆர் ரஹ்மான் இசையில் தொடர்ச்சியாக பாடல்களை பாடினார். அதேபோல யுவன் சங்கர் ராஜா, ஹாரிஸ் ஜெயராஜ் போன்ற முன்னணி இசையமைப்பாளர்கள் இசையிலும் அவர் குரல் ஒலித்தது. மும்பையில் பிறந்த அவர் தன் பள்ளிப்படிப்பை சென்னையில் தொடங்கி, கர்நாடக இசை மற்றும் கஜல், இந்துஸ்தானி போன்றவற்றை முறையாக கற்றவர் ஆவார். இசைத் துறையில் தனக்கென தனி முத்திரை பதித்தவர் எந்த கவிஞரின் பாடலை பாடி தனது இசைப் பயணத்தை தொடங்கினாரோ அந்த கவிஞர் மீது அவர் வைத்த குற்றச்சாட்டு ஒட்டுமொத்த திரையுலகம் அதிர்ச்சி அடைய வைத்தது. 

அது அவரது இசை வாழ்க்கைக்கும் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் மீடு ஹாஸ்டாக் உலகம் முழுவதும் பிரபலமானது, அப்போது அந்த ஹாஸ்டாக்குடன் தனக்கு ஏற்பட்ட பாலியல்  தொல்லைகளை சமூக வலைதளத்தில் பலரும் பதிவு செய்து பரபரப்பை ஏற்படுத்தினர். அந்த வரிசையில் தனது டுவிட்டர் பக்கத்தில் பாடலாசிரியர் வைரமுத்து தன்னிடம் பாலியல் ரீதியாக தவறாக நடந்து கொண்டதாக சின்மயி பதிவிட்டார். அந்த சீண்டல் 2005, 2006 ஆண்டுகளில் நடந்ததாக அதல் குறிப்பிட்டிருந்தார். ஒரு பாடல் சம்பந்தமாக ஸ்விட்சர்லாந்து சென்றிருந்தபோது அங்கே தனக்கு ஒத்துழைக்குமாறு அவர் மிரட்டியதாகவும் சின்னமியி கூறியிருந்தார். அது அப்போது மிகப் பெரும் விவாத பொருளாக மாறியது. ஆனால் 2005ஆம் ஆண்டில் நடந்த ஒரு சம்பவத்தை ஏன் இத்தனை ஆண்டுகள் கழித்து கூறவேண்டும் என பலரும் சின்மயியை கேள்வி கணைகளால் துளைத்தெடுத்தனர். இந்நிலையில் தொடர்ந்து தனக்கு ஏற்பட்ட அநீதிக்கு நீதி கிடைக்க வேண்டும் என அவர் முழங்கி வருகிறார்.

இனி தன்னைப்போல் பாதிக்கப்பட்ட பலருக்கும் குரல் கொடுக்கப் போவதாக அறிவித்த அவர் தொடர்ந்து சமூக வலைதளங்களில் பெண் உரிமைகளுக்காகவும், பாலியல் சீண்டல்களால் பாதிக்கப்படுவோருக்காகவும் குரல் கொடுத்து வருகிறார். இந்நிலையில் கோவை சின்மயா வித்யாலயா பள்ளியில் ஆசிரியரின் பாலியல் தொல்லையால் மாணவி உயிரிழந்துள்ள சம்பவத்தில் அவர் தனது ஆதங்கத்தை வீடியோவாக வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், அந்த மாணவி உயிரிழந்ததற்கு இந்த சமுதாயமும் பொறுப்பேற்க வேண்டும், இந்த சமூகம் ஒரு பிற்போக்கு சமுதாயமாக உள்ளது, தன் வீட்டு பெண்களை யாராவது பாலியல் தொந்தரவு, சீண்டல் செய்துவிட்டால்கூட அது வெளியில் தெரிந்து விடாமல் பாதுகாத்துக் கொள்ளும் மனநிலையில் பெற்றோர்களே உள்ளனர். அப்படி அது வெளியில் தெரிந்தால் தங்களுக்குதான் அது அவமானம் என்று எண்ணும் ஒரு மனநிலை இந்த சமுதாயத்தில் உள்ளது. அவசியம் பள்ளிக்கு செல்லும் பிள்ளைகளுக்கு அவர்கள் வயதிற்கேற்ப பாலியல் கல்வி கற்றுக் கொடுப்பது அவசியம். பள்ளிக்கு செல்லும் மாணவிகள், வேலைக்கு செல்லும் பெண்கள்,

பணியிடங்களில் பாலியல் வன்முறை குறித்து விசாரிப்பதற்காக விசாகா கமிட்டி போன்றவை இருக்கிறதா என்பதை  உற்தி செய்ய வேண்டும், நமது சமுதாயம் பாலியல் சீண்டல்கள், துன்புறுத்தல்களை மறைப்பதை கலாச்சாரமாக வைத்துள்ளனர். குறிப்பாக இந்த கலாச்சாரம் குற்றவாளிகளுக்கு துணைபோகும் கலாச்சாரமாக இருக்கிறது, பாதிக்கப்பட்ட பெண் தனக்கு அநீதி நடந்துள்ளது என வெளியில் கூறினால், அந்தப் பெண்ணை எந்த அளவுக்கு கேவலப்படுத்த முடியுமோ, அவமானப்படுத்த முடியுமோ அந்த அளவிற்கு அவமானப்படுத்தும் சமுதாயமாக இருக்கிறது. அதற்கு நானே சாட்சி, குறிப்பாக பெண் குழந்தைகள் மற்றும் பாலியல் சீண்டலுக்கு ஆட்படுவதைபோல ஆண் குழந்தைகளும் பாலியல் சீண்டலுக்கு ஆட்படுகிறார்கள். அது வெளியில் தெரிவது இல்லை, கடந்த 3, 4  ஆண்டுகளாக என்னிடம் நிறைய ஆண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல்களை பகிர்ந்துள்ளனர். 

குறிப்பாக இந்த துப்பட்டா போடவில்லை என்றால், இவ்வளவு டைட்டாக ஜீன்ஸ் போட வில்லை என்றால், பொட்டு வைக்கலாமா போனால், அதனால பெண்களுக்கு அது நடந்ததுவிடும், இது நடந்துவிடும் என்று பேசுபவர்கள் முதலில் நிறுத்துங்கள்.சில குறிப்பிட்ட ஆண்வர்க்கம் பெண்கள் இந்த ஆடை உடுத்தக் கூடாது, அந்த ஆடை உடுத்த கூடாது என பேசுகின்றனர். நாங்கள் பாதுகாப்பு கேட்பதே அது போன்ற ஆண்களிடமிருந்து தான் என அவர் தெரிவித்துள்ளார். மேலும் பள்ளியில் கல்லூரியில் இடம் கிடைத்தால் போதும், படித்து முடித்தால் போதும் பிறகு வேலைக்கு போனால் போதும், என்று சம்பளம் கிடைத்தால் போதும்  பாலியல் சீண்டல்கள் மூடி மறைக்க வேண்டும் என கூறிக் கொண்டிருக்கும் இந்த சமுதாயத்தில் என்னைப்போல  சிலர் பேசிக் கொண்டிருக்கின்றோம். நீதி கிடைக்காதா என்பதற்காக போராடிக் கொண்டிருக்கிறோம், என்னை போன்றவர்களை அசிங்கப்படுத்துவதற்காகவே பலர் சுற்றி கொண்டிருக்கின்றனர். உங்கள் வீட்டு குழந்தைகளை பாதுகாக்க உங்களுக்கு ஆர்வம் இல்லை என்றாலும் பல வீடுகளில் உள்ள குழந்தைகளை பாதுகாக்க வேண்டும் என்ற அக்கரை, அவர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்ற ஆசை எங்களைப்போல நான்கு பேருக்கு இருந்து கொண்டே இருக்கும். எந்த வயதில் இருப்பவர்களாக இருந்தாலும் சரி அவர்கள் அனைவரும் ச*** எஜிக்கேஷன் தெரிந்து கொள்வது அவசியம் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
 

click me!