ப்ளீஸ் இதுபோன்ற பொய்யான செய்திகளை பரப்பாதீங்க.. அமைச்சர் செந்தில் பாலாஜி..!

Published : Apr 07, 2022, 08:33 AM IST
ப்ளீஸ் இதுபோன்ற பொய்யான செய்திகளை பரப்பாதீங்க.. அமைச்சர் செந்தில் பாலாஜி..!

சுருக்கம்

 6 மாதங்களுக்குள் 1 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கி வரலாற்று சாதனை படைக்கப்பட்டுள்ளது. 16-ம் தேதி காணொளிக் காட்சி வாயிலாக இந்த விவசாயிகளுடன் முதல்வர் பேச இருக்கிறார்.

மின்வெட்டு ஏற்பட்டால் 24 மணிநேரமும் மின்னகத்தை தொடர்பு கொள்ளலாம். சமூக வலைத்தளங்களில் மின் வெட்டு என்ற பொய்யான செய்திகளை பரப்ப வேண்டாம் என அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.

வரலாற்று சாதனை

சென்னை அண்ணா சாலையில் உள்ள மின் வாரிய தலைமை அலுவலகத்தில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி;- 6 மாதங்களுக்குள் 1 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கி வரலாற்று சாதனை படைக்கப்பட்டுள்ளது. 16-ம் தேதி காணொளிக் காட்சி வாயிலாக இந்த விவசாயிகளுடன் முதல்வர் பேச இருக்கிறார்.

ஒப்பந்தம்

11 மாத காலத்தில் 3527 மெகா வாட் மின்சாரத்திற்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. நிலக்கரி தேவையை பூர்த்தி செய்யும் வகையில் 4.80 லட்சம் டன் வாங்க ஒப்பந்த புள்ளி கோரப்பட்டுள்ளது. கோடை கால மின் சேவையை முதலமைச்சர் தொடர்ந்து கண்காணித்து வருகிறார். 18 ஆயிரம் மெகா வாட் மின் தேவையை பூர்த்தி செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

பொய்யான செய்தி

மாநிலத்தின் சொந்த மின் உற்பத்தியை மேலும் பெருக்கவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மின் வெட்டு ஏற்பட்டால் 24 மணி நேரமும் மின்னகத்தை 9498794987 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றும், சமூக வலைத்தளங்களில் மின் வெட்டு என்ற பொய்யான செய்திகளை பரப்ப வேண்டாம் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி வலியுறுத்தியுள்ளார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Annamalai Exit: பாஜகவை விட்டு அண்ணாமலை வெளியேற இதுதான் காரணமா? டெல்லி கூட்டத்தில் கசிந்த அதிர்ச்சி தகவல்!
Trichy East By Election: தனித்தனியாய் தட்டித்தூக்கும் விஜய்.! திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் களமிறங்கும் அதிமுக வாரிசு.!