எஸ்.பி. வேலுமணிக்கு எதிராக திரண்ட மத்திய மண்டல ர.ர.க்கள்.? அதிமுக கூட்டத்தில் வைத்திலிங்கம் வெளியேறியது ஏன்.?

Published : Apr 07, 2022, 08:23 AM IST
எஸ்.பி. வேலுமணிக்கு எதிராக திரண்ட மத்திய மண்டல ர.ர.க்கள்.? அதிமுக கூட்டத்தில் வைத்திலிங்கம் வெளியேறியது ஏன்.?

சுருக்கம்

அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கு எதிராக மத்திய மண்டலத்தைச் சேர்ந்த அதிமுகவினர் திரண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதிமுகவில் தற்போது உட்கட்சி தேர்தல நடைபெற்று வருகிறது. இதுதொடர்பான ஆலோசனைக் கூட்டம் சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நேற்று மாலை நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்டச் செயலாளர் பதவிகளை தலைவர்கள் பேசி முடிவு செய்வது தொடர்பாகவும் பல மாவட்ட செயலாளர்களை மாற்றம் செய்வது குறித்தும் ஆலோசனை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆலோசனைக் கூட்டம் சுமூகமாகவே தொடங்கியது. கூட்டத்தில் உள்கட்சித் தேர்தலில் விழுப்புரம் மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிட முடியாத நிலை இருப்பது குறித்து சிலர் கேள்வி எழுப்பியதாகத் தெரிகிறது. இதேபோல அதிமுகவில் எஸ்.பி.வேலுமணியின் ஆதிக்கம் அதிகமாக இருப்பது பற்றியும் சில நிர்வாகிகள் பிரச்சினை எழுப்பினர் என்றும் கூறப்படுகிறது.

வெளியேறிய வைத்திலிங்கம்

இந்த விஷயம் பற்றி பேசும்போது அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம், ‘எடப்பாடி பழனிசாமி மற்றவர்கள் பேச்சையும் கேட்டு செயல்பட வேண்டும்’ என்று கூறியதாகத் தெரிகிறது.  இதனால் கூட்டத்தில் பரபரப்பு எழுந்ததாகவும் வைத்திலிங்கத்துக்கு ஆதரவாக மத்திய மண்டலத்தைச் சேர்ந்த திருச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர் மாவட்ட செயலாளர்கள் ஆதரவுக் குரல் எழுப்பினர். இந்த விவகாரத்தில் தலைவர்கள் சிலர் கோபத்தில் பேசிக்கொண்டதாகவும் அந்த நேரத்தில் வைத்திலிங்கம் கோபமாக சில கருத்துக்களை முன் வைத்துவிட்டு கூட்டத்தை விட்டு வெளியேறினார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

ஓபிஎஸ் - ஈபிஎஸ் அறிவிப்பு

ஆனால், வைத்திலிங்கத்தை பிற நிர்வாகிகள் சமாதானப்படுத்தினர். ஆனாலும் அவர் வீட்டுக்கு புறப்பட்டு சென்று விட்டார். பிறகு ஓபிஎஸ் - இபிஎஸ் தொலைபேசியில் பேசிய பிறகு ஒரு மணி நேரம் கழித்து மீண்டும் கூட்டத்தில் வைத்திலிங்கம் பங்கேற்றார். பின்னர் கூட்டம் அமைதியாக் நடந்து முடிந்தது. கூட்டத்தின் முடிவில், ‘அதிமுக மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள் பதவிகள் தேர்தல் நடத்தி தேர்வு செய்யப்படுவார்கள். அதற்கான தேர்தல் ஏப்ரல் 19-ஆம் தேதி முதல் 24-ஆம் தேதி வரை நடைபெறும்’ என்று ஓபிஎஸ்ஸும் இபிஎஸ்ஸும் அறிவித்தனர். 

ஜெயக்குமார் விளக்கம்

கூட்டத்துக்குப் பிறகு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அவரிடம் வைத்திலிங்கம் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ஜெயக்குமார், “கூட்டத்தில் ஏதோ சிக்கல் எழுந்ததாக தகவல்கள் பரப்பப்படுகின்றன. ஆனால், இது எதுவுமே உண்மை இல்லை. கட்சி நிர்வாகிகள் இடையே எந்தக் கருத்து வேறுபாடும் இல்லை. ஆரோக்கியமான முறையில்தான் கூட்டம் நடந்து முடிந்தது. வைத்திலிங்கம் சொந்தப் பணிக்காகக் கூட்டத்தில் இருந்து புறப்பட்டு வெளியே சென்றார். பின்னர் மீண்டும் வந்து விட்டார். இதற்கு உடனே இட்டுக்கட்டி பல கதைகளை வெளியிடுகிறார்கள். இது எதுவுமே உண்மை கிடையாது. அதிமுக கட்டுப்பாடு கொண்ட ஓர் இயக்கம்.” என்று ஜெயக்குமார் தெரிவித்தார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஸ்டாலின் ரெடியாக இருங்க.. அடுத்த டார்கெட் தமிழ்நாடு தான்.. பிரதமர் மோடி மண்ணில் அமித்ஷா சபதம்!
ரூ.1,020 கோடி ஊழல்? ED-க்கும், பாஜகவுக்கும் அஞ்ச மாட்டோம்.. கே.என்.நேரு விளக்கம்!