முதல்வர் ஸ்டாலினையும் அமைச்சர்களையும் பார்த்தால் 23-ஆம் புலிகேசி படம் போலவே இருக்கு.. டிடிவி தினகரன் பங்கம்.!

Published : Apr 06, 2022, 09:40 PM IST
முதல்வர் ஸ்டாலினையும் அமைச்சர்களையும் பார்த்தால் 23-ஆம் புலிகேசி படம் போலவே இருக்கு.. டிடிவி தினகரன் பங்கம்.!

சுருக்கம்

தேர்தல் நேரத்தில் திமுக தேர்தல் வாக்குறுதிகளை வாரி வழங்கியது. ஆனால், அளித்த வாக்குறுதிகளை எல்லாம் இந்த அரசு நிறைவேற்றத் தவறிவிட்டது. முதல்வர் மு.க. ஸ்டாலின் துபாய் பயணம் சென்றதன் நோக்கம் விரைவில் நிச்சயமாக வெளியில் வரும்.

தமிழக முதல்வரையும் அமைச்சர்களின் செயல்பாட்டையும் பார்த்தால் ‘23-ஆம் புலிகேசி’ திரைப்பட கதைபோலவே உள்ளது என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் காட்டமாக விமர்சனம் செய்துள்ளார்.

மீண்டும் ஜெயலலிதா ஆட்சி

தருமபுரியில் டிடிவி தினகரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “அதிமுக - அமமுக கட்சிகள் இணைப்பு என்ற பேச்சுகள் தொடர்ந்து காற்று வாக்கில் வந்து கொண்டிருக்கும் செய்திகள்தான். எனவே அதைப் பற்றி நான் எதுவும் சொல்வதற்கு இல்லை. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வழியில் தமிழகத்தில் ஆட்சி அமைப்பது மட்டுமே அமமுகவின் குறிக்கோள் ஆகும். அதுதான் எங்களுடைய லட்சியமும் கூட. ஜெயலலிதாவின் ஆட்சியை தமிழகத்தில் மீண்டும் நிச்சயமாக அமைப்போம். 

மக்களுக்கு திமுக தண்டனை

தமிழகத்தில் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் திமுக ஆட்சியையும் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களின் செயல்பாடுகளை எல்லாம் பார்க்கும்போது ‘23-ம் புலிகேசி’ திரைப்பட கதையைப் போலவே உள்ளது. தமிழகத்தில் தற்போது சட்டம் - ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டிருக்கிறது. தமிழகத்தில் பேரூராட்சிகள், நகராட்சிகள், மாநகராட்சிகளில் சொத்துவரி 150 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகளை எல்லாம், தங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு திமுக அரசு தண்டனையை வழங்கியுள்ளது என்றுதான் தெரிகிறது.

துபாய் நோக்கம் வெளி வரும்

தேர்தல் நேரத்தில் திமுக தேர்தல் வாக்குறுதிகளை வாரி வழங்கியது. ஆனால், அளித்த வாக்குறுதிகளை எல்லாம் இந்த அரசு நிறைவேற்றத் தவறிவிட்டது. முதல்வர் மு.க. ஸ்டாலின் துபாய் பயணம் சென்றதன் நோக்கம் விரைவில் நிச்சயமாக வெளியில் வரும். இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கில் என்னை விசாரிக்க அமலாக்கத் துறை முறையாக சம்மன் அனுப்பினால், கண்டிப்பாக நான் விசாரணைக்கு ஆஜராவேன். மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தமிழக மக்களுக்கு ஆதரவாக அமமுக குரல் கொடுத்து வந்தது. தற்போதும் மேகதாது அணையை அமமுக தொடந்து எதிர்க்கும்” என்று டிடிவி தினகரன் தெரிவித்தார்.

PREV
click me!

Recommended Stories

எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!
இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!