திராவிட மாடல்னு சொல்லி கோவில் நடைமுறைகளை மாத்தாதீங்க… சசிகலா வலியுறுத்தல்!!

By Narendran SFirst Published May 8, 2022, 10:26 PM IST
Highlights

திராவிட மாடல் எனக்கூறி கோவில் நடைமுறைகளை அரசு மாற்ற கூடாது என்று சசிகலா தெரிவித்துள்ளார். 

திராவிட மாடல் எனக்கூறி கோவில் நடைமுறைகளை அரசு மாற்ற கூடாது என்று சசிகலா தெரிவித்துள்ளார். இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுகவின் எதிர்காலம் அனைவருக்கும் மகிழ்ச்சி அளிக்கும் வகையில் இருக்கும். ஓராண்டு திமுக ஆட்சி சாதனை என ஆட்சி செய்யும் முதல்வர் கூறி கொள்ளலாம். மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது தான் முக்கியம். மக்களை பொறுத்தவரையில் இந்த ஓராண்டு ஆட்சியில் திருப்தியாக இல்லை. கடந்த ஓராண்டு ஆட்சியில் மக்கள் மட்டுமல்லாது கடவுளுக்கும் பிரச்சினை, கஷ்டம். கோவில் விவகாரங்களில் அரசு தலையிடுவது நல்லதல்ல.

அறநிலையத்துறை அமைச்சராக இருந்தால் மட்டும் போதாது. நடைமுறைகளை முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டும். திராவிட மாடல் எனக்கூறி ஆட்சி நடத்திக்கொள்ளலாம். ஆனால் கோவில் நடைமுறைகளை அரசு மாற்ற கூடாது. ஓராண்டு கால ஆட்சி என்பது சாதனையல்ல. வேதனை என்று தான். அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்பது தவறு என்று நான் கூறவில்லை. ஆனால் கோவில்களுக்கு உள்ளே சென்று அரசியல் செய்ய வேண்டாம். இதனை அவர்கள் திருத்தி கொள்ள வேண்டும்.

நிலக்கரி தொடர்பாக முதலமைச்சரும், மின்சாரத்துறை அமைச்சரும் முரண்பட்ட கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். விளம்பரம் மட்டுமே ஆட்சியை கொடுத்து விடாது. மக்களை திருப்தியாக வைத்திருக்க வேண்டும். அனைத்தையும் சரிசெய்து கொள்ள வேண்டும். பெண்களுக்கு இலவச பேருந்து என அறிவித்துள்ள நிலையில் வேலைக்கு செல்லும் நேரத்தில் பேருந்துகள் கிடைக்காமல் அவதியுறும் பெண்கள் குறைந்த கட்டணத்திலாவது சரியான நேரத்திற்கு பேருந்துகளை இயக்க வேண்டும். அனைத்தையும் சரிசெய்ய வேண்டும் என்று தெரிவித்தார். 

click me!