ஜாதிக்கொரு சுடுகாடு.. இதுதான் திராவிட மாடலா..? திமுகவுக்கு மத்தியமைச்சர் எல். முருகன் கேள்வி.!

Published : May 08, 2022, 09:21 PM IST
ஜாதிக்கொரு சுடுகாடு.. இதுதான் திராவிட மாடலா..? திமுகவுக்கு மத்தியமைச்சர் எல். முருகன் கேள்வி.!

சுருக்கம்

 தமிழகத்தில் இன்றும் பல கோயில்களில் பட்டியலின மக்கள் உள்ளே நுழைய அனுமதி மறுக்கப்படுகிறது. பல கிராமங்களில் பட்டியலின மக்கள் கோயிலுக்கு உள்ளே நுழைய முடியவில்லை. இதுதான் திராவிட மாடலா? 

திராவிட மாடல் என்று முதல்வரும் திமுகவினரும் பேசி வருகிறார்கள். திராவிட மாடல் என்பது என்ன என்று திமுக விளக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். 

மத்திய அரசு மீது பழி

கன்னியாகுமரியில் மத்திய அமைச்சர் எல். முருகன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “2014-ஆம் ஆண்டுக்கு பிறகு இந்தியாவின் அனைத்து மாநிலங்களும் மின்மிகை மாநிலமாக உள்ளன. ஆனால், தமிழகத்தில் சரியான பராமரிப்பு இல்லாததாலும், நிர்வாக சீர்கேடு காரணமாகவும் மின் வெட்டு உள்ளது. பொருளாதாரத்தில் கீழ்நிலையில் சென்றிருக்கிறது தமிழக அரசு. அதையெல்லாம் மக்கள் தலையில் சுமத்திவிட்டு, மத்திய அரசு மீது பழிபோடுவதை மட்டுமே முதல்வர் ஸ்டாலின் வாடிக்கையாக வைத்துள்ளார். 

எது திராவிட மாடல்?

திராவிட மாடல் என்று முதல்வரும் திமுகவினரும் பேசி வருகிறார்கள். திராவிட மாடல் என்பது என்ன என்று திமுக விளக்க வேண்டும். ஐம்பது, அறுபது ஆண்டுகளாக திராவிட மாடலில்தான் தமிழகத்தில் ஆட்சி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. தமிழகத்தில் இன்றும் பல கோயில்களில் பட்டியலின மக்கள் உள்ளே நுழைய அனுமதி மறுக்கப்படுகிறது. பல கிராமங்களில் பட்டியலின மக்கள் கோயிலுக்கு உள்ளே நுழைய முடியவில்லை. இதுதான் திராவிட மாடலா? ஒவ்வொரு ஜாதிக்கென்று சுடுகாடு வைத்துக்கொள்வதுதான் திராவிட மாடலா? உண்மையான சமூக நீதியின் ஹீரோ என்றால், அது பாரதப் பிரதமர் நரேந்திர மோடிதான். வெட்கம் இல்லாமல் எதை திராவிட மாடல் என்று திமுக கூறுகிறது என்று தெரியவில்லை.

காங்கிரஸ் ஆட்சியில் துப்பாக்கிச்சூடு

காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது தினந்தோறும் மீனவர்கள் படுகொலை சம்பவங்கள் நடைபெற்றன. 600-க்கும் மேற்பட்ட முறை துப்பாக்கிச்சூடு நடந்தது. பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்ற பிறகு ஒரு துப்பாக்கிச் சூடுகூட நடக்கவில்லை. தமிழக மீனவர்களுக்கு பாதுகாப்பை மத்திய அரசு உறுதிபடுத்தியுள்ளது” என்று எல். முருகன் தெரிவித்துள்ளார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!
இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!