
கடந்த டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி முதலமைச்சர் ஜெயலலிதா காலமானார். இதையடுத்து ஆர்.கே.நகர் கடந்த மூன்று மாதாமாக காலியாக உள்ளது. இந்நிலையில், சென்னை ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதிக்கு ஏப்ரல் 12-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
இதில் எப்படியும் தொகுதியை கைப்பற்றிட வேண்டும் என அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை தொடங்கியுள்ளன.
அதிமுகவில் இருக்கும் சசிகலா தரப்பு, ஓ.பி.எஸ் தரப்பு, தீபா தரப்பு என மூன்று அணியும் தங்களுக்கே வெற்றி கிட்டும் என தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே திமுக தனது ஆதரவு பலத்தை கூட்டி கொண்டே செல்கிறது. இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி தி.மு.க.வு.க்கு ஆதரவு அளிக்கும் என அக்கட்சியின் மாநில தலைவர் காதர் மொய்தீன் அறிவித்துள்ளார்.
இந்நிலையில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தி.மு.க.வுக்கு காங்கிரஸ் ஆதரவு அளிக்கும் என்றும், தி.மு.க. வெற்றிக்கு காங்கிரஸ் தொண்டர்கள் பாடுபடவேண்டும் என்றும் அக்கட்சியின் மாநிலத் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.