"மணிப்பூர் மாதிரியே உனக்கும் சேலையை உருவணுமா?" மேடையிலேயே திமுக பெண் சேர்மனுக்கு நடந்த கொடுமை!

By Velmurugan s  |  First Published Jul 25, 2023, 10:13 AM IST

மணிப்பூர் வன்முறையை கண்டித்து தென்காசி மாவட்டத்தில் நடந்த திமுக கண்டன ஆர்ப்பாட்டத்தில் மேடையில் பேசிக்கொண்டிருந்த பெண் பிரமுகருக்கு அக்கட்சி ஆதரவாளர்களே சேலையை உருவி விடுவேன் என மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு.


மணிப்பூர் வன்கொடுமையை கண்டித்து திமுக மகளிரணி சார்பில் தென்காசியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக மாவட்ட பெண் சேர்மன் தமிழ்செல்வியை அரசியல் முன்விரோதம் காரணமாக மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் பேசவிடாமல் தடுத்ததாகக் கூறப்படுகிறது. 

Tap to resize

Latest Videos

undefined

இதனால் ஆத்திரமடைந்த தமிழ்செல்வி “மணிப்பூர் வன்கொடுமையை கண்டித்து போராடுகிறோம், அதற்கும் இங்கு நடப்பதற்கும் என்ன வித்தியாசம்?” என்று கோபத்துடன் மாவட்ட பெண் சேர்மன் கேள்வி எழுப்பி உள்ளார். இதனால் ஆத்திரத்தின் உச்சத்திற்குச் சென்ற மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் ஆதரவாளர்கள், “மணிப்பூர் மாதிரியே உனக்கும் சேலையை உருவணுமா?” என்று மிரட்டியதோடு சேலையை பிடித்து இழுக்க முற்பட்டதாக கூறப்படுகிறது.

“மணிப்பூரில் இன அழிப்பு படுகொலை“ புதுவையில் எம்.பி. ரவிக்குமார் தீப்பந்தம் ஏந்தி போராட்டம்

மாவட்ட பெண் சேர்மன் கையில் வைத்திருந்த மைக் பிடுங்கப்பட்டு அவர் பின் வரிசைக்கு தள்ளப்பட்டுள்ளார். அதற்குப் பிறகும் ஆத்திரம் தணியாத சிவபத்மநாதன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் காவலரை வைத்து மாவட்ட பெண் சேர்மனை மேடையை விட்டு கீழே இறக்கிவிட்டுள்ளனர். 

கன்னியாகுமரியில் கஞ்சா கும்பல்களுக்கு இடையே மோதல்; ஒருவருக்கு அரிவாள் வெட்டு

எங்கோ இருக்கும் மணிப்பூரில் நடந்த வன்கொடுமையை கண்டித்து நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் சொந்தக் கட்சியினரால் திமுக மாவட்ட பெண் சேர்மனுக்கு நடந்த கொடுமை தொடர்புடைய வீடியோ இப்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது.

click me!