பெரியார் பற்றி ரஜினிக்கு தலையும் புரியாது வாலும் தெரியாது.. துரைமுருகன் சுளீர் விமர்சனம்!

By Asianet TamilFirst Published Jan 24, 2020, 9:43 AM IST
Highlights

பெரியார் பற்றி ரஜினி பேசிய சர்ச்சையில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கருத்து தெரிவிக்கையில், “ரஜினி அரசியல்வாதி அல்ல. அவர் ஒரு நடிகர். பெரியார் குறித்து பேசும்போது சிந்தித்து நண்பர் ரஜினி பேச வேண்டும்” என்பதோடு முடித்துக்கொண்டார். எனவே பொதுவெளியில் ரஜினியைக் கண்டு திமுக பயந்துள்ளது என்று ரஜினி ரசிகர்களாலும் பாஜகவினராலும் கருத்துகள் பரப்பப்படுகின்றன. இந்நிலையில் திமுக பொருளாளர் துரைமுருகன், பெரியார் விஷயத்தில் ரஜினியை விமர்சித்துள்ளார்.
 
பெரியாரை பற்றி நடிகர் ரஜினிகாந்த்க்கு தலையும் தெரியாது, வாலும் தெரியாது என்று திமுக பொருளாளர் துரைமுருகன் விமர்சித்துள்ளார்.
துக்ளக் விழாவில் பெரியார் குறித்து ரஜினி பேசியது சர்ச்சையானதையடுத்து பாஜகவை தவிர்த்த பல அரசியல் கட்சிகளும் ரஜினியை விமர்சித்துவருகின்றன. அதிமுகவினர்கூட ரஜினியை விமர்சித்துவருகிறார்கள். ஆனால், திமுகவில் அந்த அளவுக்கு ரஜினியை விமர்சிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு வைக்கப்பட்டு வருகிறது. முரசொலியைத் துக்ளக்குடன் ஒப்பிட்டு பேசியதை, முரசொலி தலையங்ககத்தில் ரஜினி பெயரைக் குறிப்பிடாமலேயே எழுதப்பட்டிருந்தது. திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி மட்டும் ரஜினியை ட்விட்டரில் மறைமுகமாக விமர்சித்திருந்தார்.

பெரியார் பற்றி ரஜினி பேசிய சர்ச்சையில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கருத்து தெரிவிக்கையில், “ரஜினி அரசியல்வாதி அல்ல. அவர் ஒரு நடிகர். பெரியார் குறித்து பேசும்போது சிந்தித்து நண்பர் ரஜினி பேச வேண்டும்” என்பதோடு முடித்துக்கொண்டார். எனவே பொதுவெளியில் ரஜினியைக் கண்டு திமுக பயந்துள்ளது என்று ரஜினி ரசிகர்களாலும் பாஜகவினராலும் கருத்துகள் பரப்பப்படுகின்றன. இந்நிலையில் திமுக பொருளாளர் துரைமுருகன், பெரியார் விஷயத்தில் ரஜினியை விமர்சித்துள்ளார்.

நாமக்கல்லில் செய்தியாளர்களைச் சந்தித்த துரைமுருகன், “ பெரியார் மறைந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனாலும் அவர் விவாதப் பொருளாக இன்றும் நிலைத்து நிற்கிறார். பெரியாரை பற்றி நடிகர் ரஜினிகாந்த்க்கு தலையும் தெரியாது, வாலும் தெரியாது. கட்சித் தலைவர் மு.க ஸ்டாலின் சொன்னதுபோல, ரஜினிகாந்த் பேசாமல் இருந்தால் அவருக்கு நல்லது. இங்கே அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். இது ஒரு திறந்த மடம்.” என்று தெரிவித்தார். 
பெரியார் விஷயத்தில் அதிமுக அமைச்சர்கள் ரஜினியை விமர்சித்துவரும் நிலையில், தற்போது திமுக முன்னணி தலைவர்களும் விமர்சிக்கத் தொடங்கியிருப்பதாகப் பார்க்கப்படுகிறது.

click me!