திமுக வைத்த கடனுக்கு அதிமுக வட்டி செலுத்துகிறது... முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி..!

Published : Feb 24, 2020, 04:08 PM IST
திமுக வைத்த கடனுக்கு அதிமுக வட்டி செலுத்துகிறது... முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி..!

சுருக்கம்

தமிழகத்தில் சிறுபான்மையினர் யாரும் அச்சபடத் தேவையில்லை. நானும், அமைச்சர் உதயகுமாரும் ஏற்கனவே சட்டப்பேரவையில் தெளிவுப்படுத்தியுள்ளோம். மத்திய திமுக அங்கம் வகித்த போதுதான் என்.பி.ஆர். சட்டம் அறிமுகப்பத்தப்பட்டது. ஆனால், அதிமுக ஆட்சிக்கு அவப்பெயர் இடையூறு ஏற்படுத்தவே தவறான செய்தியை திமுக பரப்பி வருகிறது. 

தமிழகத்தில் பெண்கள் அச்சமின்றி வாழ்கின்றனர். பாதுகாப்பான நகரமாக சென்னை, கோவை உள்ளது என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். 

இதுதொடர்பாக கோவை விமான நிலையத்தில் பேட்டியளித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி;- தமிழகத்தில் சிறுபான்மையினர் யாரும் அச்சபடத் தேவையில்லை. நானும், அமைச்சர் உதயகுமாரும் ஏற்கனவே சட்டப்பேரவையில் தெளிவுப்படுத்தியுள்ளோம். மத்திய திமுக அங்கம் வகித்த போதுதான் என்.பி.ஆர். சட்டம் அறிமுகப்பத்தப்பட்டது. ஆனால், அதிமுக ஆட்சிக்கு அவப்பெயர் இடையூறு ஏற்படுத்தவே தவறான செய்தியை திமுக பரப்பி வருகிறது. 

இதையும் படிங்க;- உல்லாசத்துக்கு இடையூறு... பெற்ற மகனை கள்ளக்காதலுடன் சேர்ந்து அடித்துக்கொன்ற காமவெறி பிடித்த தாய்..!

திமுக ரூ.1 லட்சம் கோடி கடன் வைத்து இருந்தபோது வெள்ளை அறிக்கை விட்டார்களா? என கேள்வி எழுப்பினார். திமுக வைத்த கடனுக்கு அதிமுக வட்டி செலுத்துகிறது. பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு நிதியை பயன்படுத்துவதால் தமிழகத்தின் கடன் தொகை உயர்ந்துள்ளது. அதிமுக அரசு நல்ல திட்டங்களை அறிவிப்பதால் மு.க.ஸ்டாலினால் அதை பொறுத்துக் கொள்ள முடியவில்லை. இது ஜனநாயக நாடு போராட்டத்துக்கு அதிமுக அரசு எந்தவித கட்டுப்பாடும் விதிக்காது. 

கே.சி.பழனிச்சாமி அதிமுகவில் இல்லை. அவர் பல தவறுகளை செய்து சிறை சென்றுள்ளார். மு.க.ஸ்டாலின் தொடர்ந்து முதலமைச்சர் கனவில்தான் இருக்கிறார். அடுத்த முறையும் அதிமுக தான் ஆட்சிக்கு வரும். குடிமராத்து திட்டம் வெற்றி பெற்றதால் மு.க.ஸ்டாலின் மற்றும் தினகரனால் பொருத்துக்கொள்ள முடியவில்லை என முதல்வர் பழனிச்சாமி கூறியுள்ளார். 

PREV
click me!

Recommended Stories

நாளை தவெக வில் சேருகிறார் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம்..! டெல்டாவை தட்டி தூக்க பக்கா ஸ்கெட்ச்
ஜி.கே.மணி மனுசனே இல்ல.. அப்பாவையும், என்னையும் பிரிச்சிட்டாரு.. போட்டுத் தாக்கிய அன்புமணி!