இந்தியாவை அமெரிக்கா விரும்புகிறது... இந்தியாவை அமெரிக்கா மதிக்கிறது...!! படுத்தே விட்டார் ட்ரம்ப்...!!

By Ezhilarasan BabuFirst Published Feb 24, 2020, 2:22 PM IST
Highlights

உலகின் மதிப்புமிக்க தலைவரான ட்ரம்பை  இந்தியா வரவேற்கிறது , ட்ரம்பிற்கு  நமஸ்தே நமஸ்தே என பிரதமர் மோடி வரவேற்றார் , பின்னர்  உரையாற்ற வந்த அதிபர் ட்ரம்ப்,  பதிலுக்கு  நமஸ்தே என  கூறி இந்தியர்களுக்கு வணக்கம் தெரிவித்தார்.  

அமெரிக்கா இந்தியாவை விரும்புகிறது... அமெரிக்கா இந்தியாவை மதிக்கிறது.... என இந்திய மக்கள் மத்தியில் உரையாற்றிய அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார் ,  அவரின் பேச்சுக்கு மைதானத்தில் கூடியிருந்த மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர் , அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் 2 நாள் சுற்றுப் பயணமாக தனது குடும்பத்தினருடன் இந்தியா வந்துள்ளார் .  குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் விமான நிலையம் வந்திறங்கிய அவருக்கு இந்திய பிரதமர் மோடி வரவேற்பு அளித்தார் ,  அப்போது குஜராத் மாநில கலைய கலாச்சாரப்படி அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது . 

பின்னர் அங்கிருந்து சபர்மதி ஆசிரமத்தற்கு  சென்ற அவர்,   மகாத்மா காந்தியின் வாழ்க்கை முறைகளையும் அவர்கள் அவர் போதித்த நெறிகளையும் பார்வையிட்டு வியந்தார்,  பின்னர் அங்கிருந்து புதிதாக கட்டப்பட்டுள்ள சர்தார் வல்லபாய் பட்டேல் விளையாட்டு அரங்கத்திற்கு வந்த அவர்,  அங்கு திரண்டிருந்த  சுமார் 1.25 லட்சம் மக்கள் முன்னிலையில் உரையாற்றினார் ,  முன்னதாக உரையாற்றிய மோடி அமெரிக்க அதிபர் ட்ரம்ப்  இந்தியாவின் உற்ற நண்பர் என்றார் ,  உலகின் மதிப்புமிக்க தலைவரான ட்ரம்பை  இந்தியா வரவேற்கிறது , ட்ரம்பிற்கு  நமஸ்தே நமஸ்தே என பிரதமர் மோடி வரவேற்றார் , பின்னர்  உரையாற்ற வந்த அதிபர் ட்ரம்ப்,  பதிலுக்கு  நமஸ்தே என  கூறி இந்தியர்களுக்கு வணக்கம் தெரிவித்தார்.  

தொடர்ந்து பேசிய அவர்,   அமெரிக்கா எப்போதும் இந்தியாவை விரும்புகிறது என்றார் .  இந்தியா மனித குலத்துக்கு நம்பிக்கை அளிக்கும் நாடு என்றார். அதேபோல் கடின உழைப்புக்கு நல்ல உதாரணம் இந்திய பிரதமர் மோடி என அவர் புகழாரம் சூட்டினார்,  பொருளாதாரத்தில் உலகிற்கே வழிகாட்டும் நாடாக இந்தியா உள்ளது. இரவு பகல் பாராமல் உழைக்கும் பிரதமர் மோடி என்றார்,  கடந்த 10 ஆண்டுகளில் சுமார் 27 கோடி இந்தியர்கள் வறுமையில் இருந்து மீண்டு உள்ளனர் என்றார். ஒவ்வொரு நிமிடமும் 7 பேர் வறுமையில் இருந்து மீண்டு வருகின்றனர் என்றார்,  இந்தியா உலகிற்கு அமைதியை போதிக்கும் நாடு இந்தியா சகிப்புத்தன்மை கொண்ட  நாடு என இந்தியாவை பாரட்டி புகழ்ந்தார் ட்ரமப் .  

 

click me!