சீனா அதிபருக்கு பல்லிளித்த கம்யூனிஸ்டுகள்...!! அதிபர் டிர்ம்பை எதிர்க்கும் கீழ்த்தர அரசியல்...!!

By Ezhilarasan BabuFirst Published Feb 24, 2020, 1:54 PM IST
Highlights

அப்போது  விமான நிலையத்தில் அவருக்கு குஜராத் மாநில பாரம்பரிய  கலை கலாச்சாரம்  முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது, இந்நிலையில் அமெரிக்க அதிபரின்  வருகை இந்தியாவுக்கு எந்தவிதத்திலும் நன்மை பயக்காது என்று கம்யூனிஸ்ட் கட்சியினர் கடுமையாக விமர்சித்துவருகின்றனர். 

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இந்திய வருகைக்கு கம்யூனிஸ்டு கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் .  அமெரிக்க அதிபரின் வருகையால்  இந்தியாவிற்கு ஏற்படப் போகின்ற நன்மை என்ன.?  எனவும் அவர்கள் கேள்வி எழுப்பிவருகின்றனர். அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அவரது மனைவி மற்றும் மகளுடன் இந்தியா வருகை தந்துள்ளார் .  தனது குடும்பத்தினருடன் சர்வதேச வெளிநாட்டு பயணம் மேற்கொள்வது  ட்ரம்புக்கு  இதுவே முதல் முறை ஆகும் .  இன்று காலை குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையம்  வந்த அமெரிக்க அதிபர் டிரம்ப்பை  பிரதமர் மோடி வரவேற்றார் .  

அப்போது  விமான நிலையத்தில் அவருக்கு குஜராத் மாநில பாரம்பரிய  கலை கலாச்சாரம்  முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது, இந்நிலையில் அமெரிக்க அதிபரின்  வருகை இந்தியாவுக்கு எந்தவிதத்திலும் நன்மை பயக்காது என்று கம்யூனிஸ்ட் கட்சியினர் கடுமையாக விமர்சித்துவருகின்றனர். அவரின் இரண்டுநாள் பயணத்திற்காக இந்திய அரசு பல நூறு கோடிகளை செலவு செய்து மக்களின் வரி பணத்தை வீணாக்கி உள்ளது .  அதுமட்டுமல்லாமல் டிரம்பை மோடி கட்டித்தழுவுவ தால் இந்தியாவின் பொருளாதாரத்தில் மாற்றம் ஒன்றும் ஏற்படப்போவதில்லை .  வரி மற்றும் வர்த்தகத்தில்  அமெரிக்கா இந்தியாவுக்கு சாதகமாகவும் நடந்து கொள்ளவும் போவதில்லை என கடுமையான விமர்சனத்தை முன்வைத்து வருகின்றனர் . 

அதேபோல் ஈரான் நாட்டில் அத்துமீறி தாக்குதல் நடத்தி அந்நாட்டின் வளங்களை கைப்பற்ற முயற்சிக்கும்  அதிபர் டிரம்புக்கு இந்தியாவில் இத்தனை பெரிய வரவேற்பா என விமர்சித்து வருகின்றனர் .  ஆனால் இதே கம்யூனிஸ்டுகள் சீன அதிபர் ஜீ ஜின்பிங் தமிழகம் வருகை தந்த போது தனிப்பட்ட முறையில் அவரை வரவேற்று அறிக்கை வெளியிட்டு அறிக்கை வெளியிட்டதுடன்,   ஜி ஜின்பிங்கின் வருகை இந்திய அரசியல் வரலாற்றில் மறக்க முடியாத நாள் என மகிழ்ச்சி தெரிவித்து புலங்காகிதம் அடைந்த நிலையில் அமெரிக்க அதிபர் எதிர்ப்பு அரசியல் உள்நோக்கம் கொண்டது என மக்கள் கடுமையாக கம்யூனிஸ்டுகளை விமர்சிக்கின்றனர்.  
 

click me!