திணறடிக்கத் திட்டமிட்ட திமுக... கதறும் கமல்ஹாசன்... நடுக்கத்தில் நாம் தமிழர்... அலறும் அதிமுக..!

Published : May 15, 2021, 01:05 PM IST
திணறடிக்கத் திட்டமிட்ட திமுக... கதறும் கமல்ஹாசன்... நடுக்கத்தில் நாம் தமிழர்... அலறும் அதிமுக..!

சுருக்கம்

பத்தாண்டுகளுக்கு பிறகு திமுக ஆட்சியைப் பிடித்து விட்டது. ஆனாலும், தேர்தல் ரிசல்ட் அன்று மதியம் வரை திமுக வெற்றிபெறுமா? எனக் கலக்கத்தில்தான் இருந்தனர் அக்கட்சினர்.

பத்தாண்டுகளுக்கு பிறகு திமுக ஆட்சியைப் பிடித்து விட்டது. ஆனாலும், தேர்தல் ரிசல்ட் அன்று மதியம் வரை திமுக வெற்றிபெறுமா? எனக் கலக்கத்தில்தான் இருந்தனர் அக்கட்சினர். அவர்கள் வயிற்றில் புளியை கரைத்து விட்டது அதிமுகவின் முன்னிலை நில்வரம். மாலைக்கு பிறகுதான் தங்களுக்கு வெற்றி நிச்சயம் என்பதை உணர்ந்து கொண்டது திமுக. வெற்றிபெற்று பெரும்பான்மையுடன் ஆட்சி செய்தாலும் திமுக சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் தான் ஆட்சியை பிடித்துள்ளது. 

இதனை அக்கட்சியினர் ஆத்ம திருப்தியான வெற்றியாக பார்க்க முடியாது. 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் இருந்தபோதும் அதிருப்தி ஏற்படவில்லை என்பதையே அக்கட்சியின் வெற்றி நிரூபித்து இருக்கிறது. ஆகையால், கட்சியின்கட்டமைப்பை வலுவாக்க வேண்டும் என திட்டமிட்டுள்ளது திமுக. அதற்கான அஜெண்டாவை மருமகன் சபரீசனிடம்  கொடுத்திருக்கிறார் மு.க.ஸ்டாலின்.

 

உதயநிதி ஸ்டாலின் மகன் என்றாலும், சபரீசனிடம் உள்ள ஈடுபாடு, யுக்திகள் அவரிடம் இல்லை. உதயநிதி சினிமாவே தனது தொழிலாக கருதியவர்.கட்சியின் சீனியர் தலைவர்கள் அரசியல் ரீதியாக ஆலோசகர்களாக இருந்தாலும், ஸ்டாலினுக்கு என்று தனிப்பட்ட முறையில் ஒரு நம்பிக்கைமிக்க, அதேசமயம் திறமையான நபராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டார் சபரீசன் தான்.

திமுகவை மேலும் வலுமிக்க ஒரு கட்சியாக நிறுத்துவது தான் அவருக்கு கொடுக்கப்பட்டுள்ள அஜெண்டா. ஏற்கனவே அதிமுகவிலிருந்து செந்தில் பாலாஜி, தங்கதமிழ் செல்வன் ஆகியோரை திமுக பக்கம் இழுத்தது இவர் தான். நடப்பு தேர்தலில் திமுக வெற்றிப்பெற்றிருந்தாலும், வாக்கு வங்கி குறைவாக தான் இருந்தது. திமுகவுக்கான வாக்குகளை பிரித்தது, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் தான்.

எனவே மீண்டும் திமுகவை வலிமை மிக்க கட்சியாக நிறுத்த சபரீசன் திட்டமிட்டுள்ளாராம். இதற்கென கட்சியின் பலத்தை அதிகரிக்க திட்டமிட்டுள்ளார். அதிமுகவில் மேலும் சிலரை இழுக்கவும், மக்கள் நீதி மையத்தில் இருந்து விலகிய மகேந்திரன் போன்ற மக்கள் விரும்பும் தலைவர்களை கட்சியில் எனவே மீண்டும் திமுகவை வலிமை மிக்க கட்சியாக நிறுத்த சபரீசன் திட்டமிட்டுள்ளாராம். இதனால், அதிமுக, மக்கள் நீதி ம்ய்யம், நாம் தமிழர் கட்சிகளில் இருந்து முக்கிய நிர்வாகிகளை இழுக்க காய் நகர்த்தி வருகிறார் சபரீசன் என்கிறார்கள்.  


 

PREV
click me!

Recommended Stories

ஸ்டாலின் ரெடியாக இருங்க.. அடுத்த டார்கெட் தமிழ்நாடு தான்.. பிரதமர் மோடி மண்ணில் அமித்ஷா சபதம்!
ரூ.1,020 கோடி ஊழல்? ED-க்கும், பாஜகவுக்கும் அஞ்ச மாட்டோம்.. கே.என்.நேரு விளக்கம்!