மோடியை மகாத்மாவுடன் ஒப்பிட்ட திமுக எம்.பி.. இளையராஜாவுக்கே டப் கொடுத்த பாரிவேந்தர் பச்ச முத்து.

Published : Apr 21, 2022, 04:29 PM IST
மோடியை மகாத்மாவுடன் ஒப்பிட்ட திமுக எம்.பி.. இளையராஜாவுக்கே டப் கொடுத்த பாரிவேந்தர் பச்ச முத்து.

சுருக்கம்

இதே நேரத்தில் பிரபல இயக்குனர் கே.பாக்யராஜ் மோடியை விமர்சிப்பவர்கள் குறைப்பிரசவத்தில் பிறந்தவர்கள் என கூறியிருப்பது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. ஆனால் அதற்கு அவர் மன்னிப்பு கோரியுள்ளார். 

பிரதமர் மோடியை மகாத்மா காந்தியுடன் ஒப்பிட்டு திமுக எம்பியும் ஐஜேகே கட்சியின் பொதுச்செயலாளருமான பாரிவேந்தர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் சட்டமேதை டாக்டர் அம்பேத்கருடன் மோடியை ஒப்பிட்டு இளையராஜா பேசியது நிலையில் பாரிவேந்தர் காந்தியுடன் மோடியை ஒப்பிட்டுள்ளார். மோடி இரண்டாவது முறையாக நாட்டின் பிரதமராகப் பொறுப்பேற்றுள்ள நிலையில் அவருக்கு எதிரான ஆதரவு, விமர்சனக் குரல்கள் வலுவாக எழுந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் மோடியை அவரது ஆதரவாளர்கள் வானளவு புகழ்ந்து பாராட்டி வருகின்றனர்.

மோடியின் ஒவ்வொரு திட்டங்களும் இந்தியாவை வலிமைமிக்க இந்தியாவாக மாற்றிக் கொண்டிருக்கிறது. மோடியின் வியூகங்கள் புதிய இந்தியாவை படைத்துக் கொண்டிருக்கிறது என்று புகழ் பாடி வருகின்றனர். அதே நேரத்தில் எதிர்பார்த்ததைவிட அதிக அளவிற்கு பாஜக ஒவ்வொரு தேர்தலிலும் வெற்றி வாகை சூடி வருகிறது, குற்றிப்பாக நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலில் 4 மாநிலங்களில் பாஜக கைப்பற்றியது. இது மேலும் பாஜகவுக்கு புதிய தெம்பையும் நம்பிக்கையையும் உருவாக்கியுள்ளது. இந்நிலையில் மோடியை அக்கட்சித் தொண்டர்கள் தலையில் வைத்துக் கொண்டாடி வருகின்றனர்.

இது ஒருபுறம் இருந்தாலும் பிரபலங்கள் மோடியை பாராட்டிப் புகழ்ந்து பேசி வருகின்றனர். அந்தவகையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பிரதமர் மோடியை அண்ணல் அம்பேத்கருடன் ஒப்பிட்டு இசைஞானி இளையராஜா புத்தகம் ஒன்றுக்கு முகப்புரை எழுதியிருந்தார். இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இசைஞானி இளையராஜாவின் இந்த கருத்தை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.  சட்டமேதை அண்ணல் அம்பேத்கருடன் பிரதமர் மோடியை ஒப்பிடுவது நியாயம்தானா? இளையராஜா பாஜகவுக்கு இப்படி விலை போய்விட்டாரே என்றெல்லாம் கடுமையான வார்த்தைகளால் வறுத்தெடுத்து வருகின்றனர்.

இதே நேரத்தில் பிரபல இயக்குனர் கே.பாக்யராஜ் மோடியை விமர்சிப்பவர்கள் குறைப்பிரசவத்தில் பிறந்தவர்கள் என கூறியிருப்பது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. ஆனால் அதற்கு அவர் மன்னிப்பு கோரியுள்ளார். அதாவது தமிழகத்தில் கால் பதிக்க வேண்டும் என முயன்றுவரும் பாஜக தமிழகத்திலுள்ள கலைத் துறையில் உள்ள முக்கிய ஆளுமைகளைக் கொண்டு மோடியை  புகழ்பாட வைத்து வருகிறது. இதன் மூலம் எப்படியாவது தமிழ் நாட்டுக்குள் நுழைந்து விட வேண்டும் என முயன்று வருகிறது என பல்வேறு எதிர்க்கட்சியினர் விமர்சித்து வருகின்றன. இந்த விமர்சனங்கள் அடங்குவதற்குள் திமுக நாடாளுமன்ற பெரம்பலூர் தொகுதி உறுப்பினருமான பாரிவேந்தர் பச்சமுத்து மோடியை புகழ்ந்து பாராட்டிப் பேசினார். 

திருச்சி புதூர் பகுதியில் பார்க்கவகுல முன்னேற்ற சங்கத்தின் புதிய தலைமை அலுவலகத்தை  பாரிவேந்தர் திறந்து வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், மகாத்மா காந்தியை போன்றவர் இந்திய பிரதமர் மோடி. எப்போதும் நாட்டின் முன்னேற்றத்திற்காக அலைந்து கொண்டிருக்கிறார்.  அவர் அல்லும் பகலும் உழைக்கிறார், ஆனால் அவருக்கு எதிராக தமிழகத்தில் தொடர்ச்சியாக தவறான பிம்பம் உருவாக்கப்பட்டு வருகிறது.  விரைவில் தமிழக மக்கள் மோடி குறித்து புரிந்து கொள்வார்கள். அவரை நேசிப்பார்கள். ஏற்றுக் கொள்வார்கள்.

நாட்டின் பெருமையை பாதுகாக்க நாட்டுக்காக வாழ்ந்து வரும் பெருமகன்  மோடியை தமிழகம் விரைவில் பாராட்டும். அந்த நாள் வெகு தூரத்தில் இல்லை, இவ்வாறு அவர் பேசியுள்ளார். ஏற்கனவே அண்ணல் அம்பேத்கருடன் மோடியை ஒப்பிட்டுப் பேசியது சர்ச்சையாகி உள்ள நிலையில், தற்போது மகாத்மா காந்தியுடன் மோடியை பாரிவேந்தர் பச்சமுத்து ஒப்பிட்டு பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது. 
 

PREV
click me!

Recommended Stories

வெண்டிலேட்டரில் இருக்கும் காங்கிரஸுக்கும் இந்தியா கூட்டணிக்கும் தொடர்பில்லை: உமர் அப்துல்லா அதிரடி
அமித்ஷாவுடன் பேசியது என்ன? பாஜக எத்தனை தொகுதிகளில் போட்டி? நயினார் நாகேந்திரன் விளக்கம்!