திமுகவினர் மத்தியில் பெரும் அதிர்ச்சி... ஜெ.அன்பழகன் குடும்பத்தினர் அனைவருக்கும் கொரோனா பாதிப்பு..?

By vinoth kumarFirst Published Jun 7, 2020, 10:24 AM IST
Highlights

திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் கொரோனா பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வரும் நிலையில், தற்போது அவரது மனைவி, மகன், மருமகள், பேத்திக்குக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் கொரோனா பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வரும் நிலையில், தற்போது அவரது மனைவி, மகன், மருமகள், பேத்திக்குக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

திருவல்லிக்கேணி - சேப்பாக்கம் தொகுதியின் எம்எல்ஏவும், சென்னை மேற்கு மாவட்டச் செயலாளருமான ஜெ.அன்பழகனுக்கு கடந்த ஜூன் 2ம் தேதி திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது. இதனையடுத்து, பல்லாவரத்தில் உள்ள ரேலா தனியார் மருத்துவமனை அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். பின்னர், ஜூன் 4ம் தேதி மாலை ரேலா மருத்துவமனை வெளியிட்ட செய்திக் குறிப்பில், மூச்சுத் திணறலோடு அனுமதிக்கப்பட்ட அன்பழகனுக்கு 80% செயற்கை சுவாசம் கொடுக்கப்பட்டு வருகிறது, எனவும் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் வெளியிட்டது. பின்னர், மறுநாள் காலையில் அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதாகவும் மருத்துவமனை சார்பில் தகவல் வெளியிடப்பட்டது.

இதனிடையே முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அன்பழகனின் உடல் நிலை குறித்து ரேலா மருத்துவர்களிடம் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு கேட்டறிந்தார். அரசு தரப்பில் அனைத்து உதவிகளையும் செய்யத் தயார் என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ரேலா மருத்துவமனைக்குச் சென்று மருத்துவ குழுவினரிடம் அன்பழகனின் உடல்நிலை குறித்து விசாரித்தார். இந்நிலையில், நேற்று  திமுக தலைவர் ஸ்டாலின் குரோம்பேட்டை ரேலா மருத்துவமனைக்குச் சென்று அன்பழகனின் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். 

இந்நிலையில், திமுக ஜெ.அன்பழகன் கொரோனா பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரது மனைவி, மகன், மற்றும் மருமகள், பேத்தி ஆகியோருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, அவரது குடும்பத்தினர் சிலருக்கு ஓமத்தூரார் பல்நோக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், திமுகவினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

click me!