15 கோடிக்கு லாலிபாப் மிட்டாய்.. பதவி இழந்த கல்வி அமைச்சர்... கைதட்டி சிரிக்கும் உலக நாடுகள்.!!

By T BalamurukanFirst Published Jun 7, 2020, 10:22 AM IST
Highlights

கொரோனா வைரஸ்க்கு தடுப்பு மருந்தாக மூலிகை மருந்து பள்ளி மாணவர்களுக்கு கொடுக்க திட்டமிட்ட கல்வி அமைச்சர் அந்த மருந்தை குடிக்கும் போது கசப்புத்தன்மை தெரியாமல் இருப்பதற்காக 15கோடிக்கு "லாலிபாப்" மிட்டாய் வாங்க திட்டமிட்டு அமைச்சர் பதவியை இழந்திருக்கிறார்.இந்த சம்பவம் உலக நாடுகளில் பரபபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

இந்தியப்பெருங்கடல் தீவு நாடு, மடகாஸ்கர்.இந்த நாட்டிற்கு ரிஜாசோவா ஆண்ட்ரியமனா என்பவர் கல்வி மந்திரி. இவர் பள்ளி குழந்தைகளுக்கு கொரோனா வைரஸ் பிரிசோதனை செய்து அவர்களுக்கு வருமுன் காப்பதற்காக சகசப்பான மூலிகை மருந்து கொடுக்கும் போது மாணவர்கள் கசப்பு தன்மையால் அந்த மருத்தை வெளியேற்றி விடக்கூடாது என்பதற்காக அந்நாட்டு கல்வி அமைச்சர் 15கோடிக்கு லாலிபாப் மிட்டார் வாங்க திட்டமிட்டிருக்கிறார். இதற்காக அவர் 15கோடி நிதி ஒதுக்கியிருப்பது வித்தியாசமாக இருந்தாலும் இது திட்டம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. சர்ச்சைகள் கிளம்பியதால் அந்நாட்டு அதிபர் ஆண்ட்ரி ரஜோலினா ரத்து செய்து உத்தரவிட்டிருக்கிறார்.

 சர்ச்சையில் சிக்கிய மந்திரி ரிஜாசோவா பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த நாட்டில் கொரோனா வைரஸ்க்கு கோவிட் ஆர்கானிக்ஸ் மூலிகை டானிக் பரிந்துரை செய்யப்படுகிறது. பல ஆப்பிரிக்க நாடுகள் இந்த டானிக்கை இறக்குமதி செய்கின்றன. இது கொரோனாவை எதிர்த்து போராட உதவும் என்று நம்பப்படுகிறது அந்நாட்டு மக்களால்.. மூலிகை டானிக் மீது எதிர்மறை விமர்சனங்கள் வந்தாலும், அதிபர் ஆண்ட்ரி ரஜோலினா மூலிகை டானிக்குக்கு ஆதரவான நிலைப்பாட்டை கொண்டுள்ளார்.

click me!