உதயநிதியின் அமைச்சரவையிலும் இருப்பேன்-பதவிக்காக தரம் தாழும் ஓர் மூத்த தலைவர்

By Asianet TamilFirst Published Mar 4, 2021, 8:45 AM IST
Highlights

கலைஞர் மந்திரி சபையிலும் இருப்பேன், ஸ்டாலின் மந்திரி சபையிலும் இருப்பேன், உதயநிதி மந்திரி சபையிலும் இருப்பேன்” என்று தி.மு.க பொதுச் செயலளாரும் முன்னாள் அமைச்சருமான துறைமுருகன் தெரிவித்துள்ளார். சீட்டுகாகவும் அமைச்சர் பதவிக்காகவும் துரைமுருகன் தனது 50 ஆண்டுகால அரசியல் வாழ்கையை அடமானம் வைத்துவிட்டு மூன்றாம் தர அரசியலில் ஈடுபட்டுள்ளதாக நெட்டிசன்கள் வறுத்து எடுத்து வருகின்றனர்.

சென்னை சட்ட கல்லூரியில் இளங்கலை, பச்சையப்பன் கல்லூரியில் முதுகலை பின் 1971ஆம் ஆண்டு சட்ட மன்ற உறுப்பினர் என்று 50 ஆண்டுகளுக்கும் மேல் அரசியல் அனுபவம் கொண்டவர் துரைமுருகன். எட்டு முறை எம்.எல்.ஏ தி.மு.க ஆட்சியில் சட்டத் துறை அமைச்சர் பொதுப்பணித்துறை அமைச்சர் என்று அமைச்சர் பதவிகளை வகித்தவர் துரைமுருகன். சமீபத்தில் கூட்டம் ஒன்றில் பேசிய துரைமுருகன், கலைஞர் மந்திரி சபையிலும் இருப்பேன், ஸ்டாலின் மந்திரி சபையிலும் இருப்பேன், உதயநிதி மந்திரி சபையிலும் இருப்பேன்” என்று தெரிவித்துள்ளார்.

உதயநிதி மந்திரி சபையிலும் இருப்பேன் என்று கூறுவதன் மூலம் உதயநிதிக்கு பல்லக்கு தூக்குபவராக துரைமுருகன் மாறியுள்ளார் என்று தி.மு.கவினரே தெரிவிக்கின்றனர். உதயநிதிக்கு இளைஞரணி செயலாளர் பதவி கொடுத்த போதே தி.மு.கவில் சலசலப்பு ஏற்பட்டது. தி.மு.கவின் இரண்டாம் கட்ட தலைவர்களை மதிக்காமல் உதயநிதி தனது பிரச்சரத்தின் போது செயல்பட்டதாக தி.மு.க தலைவர்கள் வருத்தம் தெரிவித்தனர்.

இந்நிலையில் துரைமுருகன் உதயநிதி அமைச்சரவையில் இருப்பேன் என்று தெரிவித்துள்ளது, தி.மு.கவினரியே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. சீட்டுக்காகவும், பதவிக்காகவும் திராவிட அரசியலின் மூத்த தலைவரே இப்படி பேசுவது காலத்தின் கொடுமை என்றும் அரசியல் தரம் தாழ்ந்து போவதற்கு துரைமுருகன் போன்றோரே காரணம் என்றும் அரசியல் வரலாற்று ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர். 

குடும்ப அரசியலை பறைசாற்றும் ஒரு கட்சியாக திமுக இருகிறது என்பதற்கு இதைவிட வேறு ஒரு நல்ல எடுத்துகாட்டு இருக்கமுடியாது.

click me!