மநீம கூட்டணி வேட்பாளரை தட்டி தூக்கிய திமுக... லால்குடி தொகுதியில் கமல்-சரத்துக்கு ஷாக்..!

Published : Mar 22, 2021, 09:22 PM IST
மநீம கூட்டணி வேட்பாளரை தட்டி தூக்கிய திமுக... லால்குடி தொகுதியில் கமல்-சரத்துக்கு ஷாக்..!

சுருக்கம்

திருச்சி லால்குடி தொகுதி சமத்துவ மக்கள் கட்சி வேட்பாளர் முரளிகிருஷ்ணன், அக்கட்சியிலிருந்து விலகி திமுகவில் இணைந்துகொண்டார்.  

திருச்சி லால்குடி தொகுதியில் அதிமுக கூட்டணியில் தமாகாவைச் சேர்ந்த தருமராஜ் போட்டியிடுகிறார். திமுக சார்பில் தொடர்ச்சியாக மூன்று முறை வென்ற சவுந்திரபாண்டியன் போட்டியிடுகிறார். அமமுக சார்பில் விஜயமூர்த்தியும், மக்கள் நீதி மய்யம் கூட்டணி சார்பில் சமத்துவ மக்கள் கட்சியைச் சேர்ந்த முரளிகிருஷ்ணன் போட்டியிடுகிறார். 
வேட்புமனு தாக்கல் முடிந்து இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று மாலை அறிவிக்கப்பட இருந்த நிலையில், வேட்பு மனுவை வாபஸ் பெற்றுக்கொண்டு விட்டு வந்துவிட்டார். அதோடு  சமத்துவ மக்கள் கட்சியின் முரளிகிருஷ்ணா திருச்சி திமுக முதன்மை செயலாளரும் மேற்கு தொகுதி வேட்பாளருமான கே.என். நேருவைச் சந்தித்து திமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார். சமகவைச் சேர்ந்த முரளிகிருஷ்ணன் விவசாயக் குடும்பத்தை சேர்ந்தவர். இவர் சமத்துவ மக்கள் கட்சி மாவட்ட செயலாளராக இருந்தவர். மூன்று முறை கவுன்சிலராக போட்டியிட்டு வெற்றி பெற்றவர்.
அந்த அடிப்படையிலேயே சரத்குமார் இவருக்கு சீட்டு கொடுத்தார். ஆனால், கடைசி கட்டத்தில் கட்சியிலிருந்து விலகி திமுகவுக்கு தாவிவிட்டார். முரளி கிருஷ்ணன் திமுகவில் இணைந்ததால் சமத்துவ மக்கள் கட்சியினரும் கூட்டணிக் கட்சியான மக்கள் நீதி மய்ய தொண்டர்களும் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர்.
 

PREV
click me!

Recommended Stories

அறிவாலய வாசலில் சாதி தீண்டாமை பார்த்து தடுக்கிறார்கள்..! முன்னாள் எம்.எல்.ஏ ஆவேசம்
அமைச்சர்களின் சொத்து வழக்குக்கு தடையாக உள்ளார்கள்.. ஜி.ஆர் சாமிநாதன், ஆனந்த் வெங்கடேஷ்க்கு எதிராக திமுக இருக்க இதுவே காரணம்..! அண்ணாமலை அதிரடி