இரட்டை இலைக்கு ஓட்டு போடலைன்னா நல்ல சாவே சாவமாட்டீங்க... வாக்காளர்களுக்கு சாபம் விட்ட அதிமுக வேட்பாளர்.!

By Asianet TamilFirst Published Mar 22, 2021, 8:47 PM IST
Highlights

இரட்டை இலைக்கு ஓட்டு போடலைனா நல்ல சாவே சாவமாட்டீங்க என்று நாமக்கல் அதிமுக வேட்பாளர் மேடையில் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
 

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. வேட்பு மனுத்தாக்கல் முடிந்துவிட்ட நிலையில், ஒவ்வொரு கட்சி வேட்பாளர்களும் தீவிர  தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். வாக்காளர்களைக் கவரும் வகையிலும் கட்சிகளின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளவற்றையும் மக்களிடம் எடுத்துச் சொல்லி வாக்குகளைச் சேகரித்து வருகிறார்கள்.

ஆனால்  நாமக்கல் சட்டப்பேரவைத் தொகுதியில் மீண்டும் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் கே.பி.பி.பாஸ்கர் பிரசாரத்தில் பேசியது இன்று சமூக ஊடகங்களில் வைரலானது. அவர் அப்படி என்ன பேசினார் என்றுதானே நினைக்கிறீர்கள். “இரட்டை இலைக்கு ஓட்டு போடலைனா நல்ல சாவே சாவமாட்டீங்க” என்று வாக்காளர்களுக்கு சாபம் விட்டு பேசியது சர்ச்சையான நிலையில் சமூக ஊடகங்களில், அது வைரலானது.

 

மேடையில் படப்படப்பாகவும் உணர்ச்சிவசப்பட்டும் பேசிய பாஸ்கர், “ உங்களுக்காக இத்தனை திட்டங்களை அறிவிச்ச பின்னரும்  நீங்க ஓட்டு போடலைனா நன்றி மறந்தவங்களா ஆயிடுவீங்க. நாமக்கல் தொகுதி நன்றி கெட்ட தொகுதி என்ற பெயரை மக்கள் வாங்க வேண்டாம் '' என்று பேசினார். இவருடைய பேச்சைப் பிடித்துக்கொண்ட எதிர்க்கட்சிகள், காரசாரமாக விமர்சித்து வருகின்றன. 

click me!