திமுக வேட்பாளர்களின் பித்தலாட்டங்கள்... அம்பலமான உண்மைகள்..!

By Thiraviaraj RMFirst Published Mar 22, 2021, 7:36 PM IST
Highlights

தலைமையிடம் தாங்கள் பட்டப்படிப்பு படித்துள்ளதாக பொய்யான தகவலை சொன்ன திமுக வேட்பாளர் இருவரின் பொய்த்தனம் அப்பட்டமாக வெளிப்பட்டுள்ளது. 
 

தலைமையிடம் தாங்கள் பட்டப்படிப்பு படித்துள்ளதாக பொய்யான தகவலை சொன்ன திமுக வேட்பாளர் இருவரின் பொய்த்தனம் அப்பட்டமாக வெளிப்பட்டுள்ளது. 

பரமக்குடி தனி தொகுதியில் திமுக சார்பில் களமிறங்கியுள்ளார் முருகேசன். வருக்கு செங்கல் சூளை, பெட்ரோல் பங்குகள் என ஏராளமான சொத்துக்கள் உண்டு. பணம் இருப்பதால் அவரை தங்களது வேட்பாளராக களமிறக்கியது திமுக தலைமை. அதேபோல் காதர்பாட்சா  என்கிற முத்துராமலிங்கம் ராமநாதபுரம் தொகுதியில் திமுக சார்பாக களமிறங்கிறார். அடுத்தடுத்த தொகுதிகளில் களம் காணும் இவர்கள் இருவரும், வேட்பாளர் பட்டியலிலும், திமுக தலைமையிலும் முரண்பாடான தகவல்களை அளித்திருப்பது தெரிய வந்துள்ளது. 

அதாவது முத்துராமலிங்கம் என்கிற காதர் பாட்சாவும், பரமக்குடி தொகுதி திமுக வேட்பாளர் முருகேசனும் தாங்கள் பி.ஏ பட்டப்படிப்பு படித்துள்ளதாக தலைமையிடம் தகவல் தெரிவித்துள்ளனர். அதனை நம்பி தங்களது அறிவிக்கிகையிலும் திமுக தலைமை இருவரையும் வேட்பாளராக அறிமுகப்படுத்தி அவர்கள் பெயர் அருகில் பி.ஏ., பாட்டாதாரிகளாக அறிவித்துள்ளது.  

ஆனால் அவர்கள் அளித்துள்ள தேர்தலுக்கான வேட்பு மனுவில் முருகேசன் 5ம் வகுப்பு படித்துள்ளதாகவும், காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் 12ம் வகுப்பு மட்டுமே படித்துள்ளதாகவும் அபிடவிட்டில் தெரிவித்துள்ளனர். இந்த தகவல் வெளியாகி இருவர் மீதும் சர்ச்சை எழுந்துள்ளன. 

click me!