திமுகவுக்கு ஆப்பு வைக்கும் பாஜக தேர்தல் அறிக்கை... அதிர்ச்சியில் ஸ்டாலின்..!

By vinoth kumarFirst Published Mar 22, 2021, 7:32 PM IST
Highlights

தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும். வேலை இழக்கும் டாஸ்மாக் ஊழியர்கள் மாநில அரசின் வேறு பிற துறைகளில் பணியமர்த்தப்படுவர் என்று பாஜக  தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது. 

தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும். வேலை இழக்கும் டாஸ்மாக் ஊழியர்கள் மாநில அரசின் வேறு பிற துறைகளில் பணியமர்த்தப்படுவர் என்று பாஜக தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது. 

தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில், அதிமுக, திமுக, அமமுக மற்றும் கூட்டணி கட்சிகள் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட நிலையில் தற்போது பாஜகவின் தேர்தல் அறிக்கையை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வெளியிட்டுள்ளார். இதில் மாநில தலைவர் முருகன், எச்.ராஜா உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தேர்தல் அறிக்கை விபரம்:

*  8, 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச டேப்லெட் வழங்கப்படும்

*  விவசாயிகளுக்கு வழங்கப்படுவது போல் மீனவர்களுக்கு வருடந்தோறும் உதவித்தொகை ரூ. 6 ஆயிரம் வழங்கப்படும்.

*  தமிழக மேல்சபை கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும். சென்னை மாநகராட்சி மேலும் 3 மாநகராட்சியாக பிரிக்கப்படும்.

*  5 ஆண்டுக்கு ஆற்றுப்படுகையில் மணல் அள்ள தடை விதிக்கப்படும். தேவையான மணல் இறக்குமதி செய்யப்படும்.

* 18 முதல் 23 வயது வரையிலான மகளிருக்கு இரு சக்கர வாகன இலவச ஓட்டுனர் உரிமம் வழங்கப்படும்.

*  பஞ்சமி நிலங்கள் மீட்கப்பட்டு பட்டியலிட மக்களிடமே வழங்கப்படும்.

*  பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினருக்கு வழங்கியுள்ள 10 சதவீத இட ஒதுக்கீடு அமல்படுத்தப்படும்.

*  மின்னணு குடும்ப அட்டை தாரர்களுக்கு குடியுரிமை பொருட்கள் இல்லம் தோறும் நேடியாக வழங்கப்படும்.

*  முன்னாள் ராணுவத்தினர் குடும்பத்தினர், போர் விதவைகளுக்கும் இலவச பேருந்து பயணச்சீட்டு சலுகை வழங்கப்படும்.

*  விதவைகள் நலவாரியம் அமைக்கப்படும். விதவைகளுக்கான ஓய்வூதியம் ரூ. ஆயிரத்திலிருந்து ரூ. 3 ஆயிரமாக உயர்த்தப்படும்

*  பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும். வேலை இழக்கும் டாஸ்மாக் ஊழியர்கள் மாநில அரசின் வேறு பிற துறைகளில் பணியமர்த்தப்படுவர்.

*  தாய் மொழியில் மருத்துவக்கல்வி மற்றும் தொழிற்கல்வி பயிற்சி அளிக்கப்படும்.

*  ஆலய அர்ச்சகர்கள் குடும்பங்களுக்கு திருமண உதவித்தொகை வழங்கும் திட்டம் கொண்டுவரப்படும்.

*  பல ஆண்டுகளாக தினக்கூலியாக பணியாற்றும் கோவில் ஊழியர்கள் பணி நிரந்தம் செய்யப்படுவர்.

*  இலங்கை அகதிகள் முகாமில் வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழ் மக்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க பரிந்துரை செய்யப்படும்.

*  உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாக தமிழ் மொழி அறிவிக்கப்படும்.

*  விவசாயத்திற்கு அதிக நிதி ஒதுக்கீட்டுடன், தனிபட்ஜெட் போடப்படும்

*  ரேஷன்பொருட்கள் வீடு தேடி விநியோகிக்கப்படும்.

ஏற்கனவே முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் கட்டப்பட்ட விவகாரத்தில், திமுக தரப்பில் வெளியிடப்பட்ட மூலப்பத்திரம் போலியானது என உண்மையை வெளியிட்டு ஸ்டாலினை பாஜக அதிர வைத்தது. இந்நிலையில், பாஜக தேர்தல் அறிக்கையில்  பஞ்சமி நிலங்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது திமுக தலைவர் ஸ்டாலினுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

click me!