கரூரை தன்வசப்படுத்திய எடப்பாடி, முக்கிய புள்ளியான சின்னசாமி தி.மு.கவிலிருந்து அ.தி.மு.கவில் ஐக்கியம்

By Asianet TamilFirst Published Mar 25, 2021, 2:10 PM IST
Highlights

தமிழக மக்கள் தங்களது சொத்துகளை பாதுக்காத்து கொள்ள வேண்டும் என்றால் அ.தி.மு.கவுக்கு வாக்களிங்க என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளார். தி.மு.கவின் சின்னசாமி மற்றும் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி பகவான் பரமேஸ்வரன் ஆகியோர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அ.தி.மு.கவில் இணைந்தனர். 

தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்து வரும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கரூரில் போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கரை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். அ.தி.மு.கவிலிருந்து அ.ம.மு.க பின் தி.மு.கவிமுற்கு சென்ற செந்தில் பாலாஜியை வறுத்து எடுத்த முதலமைச்சர், ஐந்து கட்சி மாறியவர் செந்தில் பாலாஜி, போலியானவரை பார்த்து நம்பி விட வேண்டாம் என்று மக்களை எச்சரிக்கை செய்தார்.

செந்தில் பாலாஜி ஊழல் செய்தவர் என்று கூறிவிட்டு தற்போது அவருக்கே ஸ்டாலின் வாக்கு கேட்பதாக குற்றம் சாட்டினார். முதலமைச்சரின் பேச்சை கேட்க ஆயிரக்கனக்கான மக்கள் கூடியதில் கரூர் மாநகரமே குலுங்கியது. கரூரில் தி.மு.கவின் முக்கிய நபராக விளங்கிய தி.மு.க விவசாய அணி செயலாளர் ம. சின்னசாமி மற்றும் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி பகவான் பரமேஸ்வரன் தலைமையில் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அ.தி.மு.கவில் இணைந்தனர். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் பிரச்சாரம் மாற்று கட்சியினரையும் ஈர்த்துள்ளது

click me!