குடும்ப தலைவிகளுக்கு 1000 ரூபாய் தரேன்னு சொன்னீர்களே.. செய்தீர்களா? திமுகவை திக்குமுக்காட வைக்கும் வேலுமணி.!

By vinoth kumarFirst Published Oct 1, 2021, 12:52 PM IST
Highlights

 நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் 1.5 சதவீத வாக்குகளில்தான் நாம் ஆட்சியை இழந்துள்ளோம். மக்கள் நமக்குத்தான் மீண்டும் வாய்ப்பளிக்க இருந்தார்கள். 

சட்டப்பேரவை தேர்தலில் எப்படியாவது வெற்றிபெற வேண்டும் என்பதற்காக ஸ்டாலின் பொய்யான வாக்குறுதிகளை அளித்ததாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி விமர்சனம் செய்துள்ளார்.

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ஒன்றியத்தில் அதிமுக வேட்பாளருக்கான ஆலோசனை கூட்டம் மாவட்ட தேர்தல் பொறுப்பாளரும், அதிமுக கொறடாவுமான எஸ்.பி.வேலுமணி தலைமையில் நடைபெற்றது. அதிமுக முன்னாள் அமைச்சர்கள் உடுமலை ராதாகிருஷ்ணன், எம்எஸ்எம் ஆனந்தன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர். 

இந்த கூட்டத்தில் அதிமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கு அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி ஆலோசனை வழங்கினார். அப்போது, பேசிய அவர் 5 ஆண்டுகளில் 2 முறை விவசாய கடன்களை தள்ளுபடி செய்தது முந்தைய அதிமுக அரசு என்று பெருமிதம் தெரிவித்தார். நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் 1.5 சதவீத வாக்குகளில்தான் நாம் ஆட்சியை இழந்துள்ளோம். மக்கள் நமக்குத்தான் மீண்டும் வாய்ப்பளிக்க இருந்தார்கள். 

ஆனால், திமுகவினர் பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்து மக்களை ஏமாற்றிவிட்டனர். 525-க்கும் மேற்பட்ட தேர்தல் வாக்குறுதிகளை கூறி திமுக வெற்றி பெற்றது. நீட் தேர்வு ரத்து, குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய், பெட்ரோல், டீசல் விலை குறைப்பு  உள்ளிட்ட எந்த வாக்குறுதிகளையும்,  திமுக அரசு நிறைவேற்றவில்லை என்று வேலுமணி விமர்சித்தார். 

click me!