எதைதான் அவர் விமர்சிக்கல..? செய்தியாளர்கள் மத்தியில் சீமானை பங்கம் செய்த அமைச்சர் பெரிய கருப்பன்.

By Ezhilarasan BabuFirst Published Oct 1, 2021, 12:48 PM IST
Highlights

எந்த ஒரு செயலுக்கும் எதிர்வினை ஆற்ற கூடியவராக சீமான் இருந்து வருகிறார் என தமிழக அமைச்சர் பெரிய கருப்பன் விமர்சித்துள்ளார். 100 நாள் வேலை திட்டம் புரணி பேசும் மையங்களாக செயல்படுகிறது என விமர்சித்ததுடன் அதை முற்றிலும் ஒழிக்க வேண்டுமென சீமான் கூறியிருந்த நிலையில், அமைச்சர் இவ்வாறு  விமர்சித்துள்ளார்.

எந்த ஒரு செயலுக்கும் எதிர்வினை ஆற்ற கூடியவராக சீமான் இருந்து வருகிறார் என தமிழக அமைச்சர் பெரிய கருப்பன் விமர்சித்துள்ளார். 100 நாள் வேலை திட்டம் புரணி பேசும் மையங்களாக செயல்படுகிறது என விமர்சித்ததுடன் அதை முற்றிலும் ஒழிக்க வேண்டுமென சீமான் கூறியிருந்த நிலையில், அமைச்சர் இவ்வாறு  விமர்சித்துள்ளார். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழக மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் உற்பத்தி செய்த பொருட்கள் கண்காட்சியை ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன் இன்று தொடங்கி வைத்தார். 

சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டத்தில் இந்த கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. அதில் ஏராளமான கொலு பொம்மைகள், துணி, கைவினைப் பொருட்கள் விற்பனைக் கடைகள் என 60க்கும் மேற்பட்ட ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதை அமைச்சர் பார்வையிட்டார், பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், கிராம பகுதியில் உள்ள ஏழை எளிய பெண்கள் பயன்பெறும் வகையில் கருணாநிதி ஆட்சியில் 1989 ஆம் ஆண்டு மகளிர் சுய உதவி குழு உருவாக்கப்பட்டது. ஆனால் இடையில் வந்த ஆட்சியாளர்கள் அதில் அக்கறை செலுத்தவில்லை, தற்போது முதலமைச்சரின் அக்கறையால் மகளிர் சுய உதவிக் குழுக் களின் எண்ணிக்கையை 5.50 லட்சம்  ஆக அதிகரித்துள்ளது என்றார்.

நூறு நாள் வேலைத் திட்டத்தை ஒழிக்க வேண்டுமென சீமான் கூறியுள்ளாரே என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், அவர் எதைப் பற்றிதான் விமர்சனம் செய்யாமல் இருக்கிறார், அவர் எது ஒன்றுக்கும் எதிர்வினை ஆற்றுகிறார், கிராம பகுதி மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டம் கொண்டு வரப்பட்டது, பல லட்சம் ஏழை எளிய மக்களுக்கு அது வாழ்வாதாரமாக இருந்து வருகிறது. அதை சீமான் விமர்சித்துள்ளார் என அமைச்சர் கூறினார்.

click me!