ஈரோடு கிழக்கு இடத்தேர்தலில் திமுக அதிகார துஷ்பிரயோகம் செய்துள்ளது… எடப்பாடி பழனிசாமி பகிரங்க குற்றச்சாட்டு!!

By Narendran S  |  First Published Mar 2, 2023, 10:22 PM IST

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பணநாயகம் தான் இன்றைய தினம் வெற்றி பெற்றுள்ளது என்று முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். 


ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பணநாயகம் தான் இன்றைய தினம் வெற்றி பெற்றுள்ளது என்று முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஈரோடு சட்டமன்றத் தேர்தல் இடைத்தேர்தல் கழக வேட்பாளர் தென்னரசுக்கு இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களித்த வாக்காள பெருமக்களுக்கு ஆதிமுக சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். திரிபுரா நாகலாந்து மாநிலத்தில் பாஜக வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தேர்தல் ஜனநாயகமா பணநாயகமா பார்க்கிறபோது பணநாயகம் தான் இன்றைய தினம் வெற்றி பெற்றுள்ளது. ஈரோடு கிழக்கு சட்டமன்ற தேர்தல் நாள் முதல் தேர்தல் நடக்கும் நாள் முதல் வாக்காளர்களுக்கு தினம்தோறும் திமுகவினர் பண மழை பொழிந்து வந்தனர் திராவிட முன்னேற்ற அமைச்சர்கள் 22 மாதத்தில் சம்பாதித்த பணத்தை வைத்துக் கொண்டு தேர்தலில் தண்ணீர் போல பணத்தை வாரி இறைத்து ஜனநாயக படுகொலை செய்து தேர்தல் கூட்டணி அதிகார துஷ்பிரயோகம் செய்துள்ளனர்.

இதையும் படிங்க: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் டெபாசிட் இழந்த நாம் தமிழர் கட்சி..! காரணம் இதுதான்

Latest Videos

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் ஆரம்ப காலகட்டத்தில் இருந்து வாக்காளர்களை 120 இடங்களில் டென்ட் போட்டு சாமியான பந்தல் போட்டு ஆடுகளை பட்டியலாக அடைத்து வாக்காளர்களை அடைத்து வைத்து அவர்களுக்கு அசைவ உணவு கொடுத்து தினம் தோறும் ஆயிரம் ரூபாய் பணத்தை கொடுத்து பல்வேறு பரிசு பொருட்கள் வெள்ளி கொலுசு, ஹார்ட் பேக், வாட்ச், குக்கர் போன்ற பரிசு பொருட்களை வழங்கியும் வாக்காளர்கள் வீட்டிற்கு கோழிக்கறி கொடுத்தும் தேர்தல் முடிவுக்கு பிறகு 5000 ரூபாய் பெறுமானம் உள்ள மளிகை சாமான்கள் கொடுப்பதாக டோக்கன் கொடுத்து ஏமாற்றி உள்ளார்கள். மத்திய தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்தோம். மாநில தேர்தல் ஆணையரிடம் புகார் செய்தோம். தேர்தல் அதிகாரிகள் திமுக மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதையும் படிங்க: முதலில் பாஜக கிளை தலைவரிடம் மோதுங்க, பிறகு எங்ககிட்ட வாங்க… திருமாவை சாடும் அண்ணாமலை!!

அதிமுக ஆட்சியில் நடந்து முடிந்த நன்மைகளை காட்டி வாக்குகளைக் கேட்டோம். திமுக சம்பாதித்த பணத்தை அமைச்சர்கள் வைத்துக்கொண்டு முதலீடு செய்து இவர்கள் இந்த வெற்றியை பெற்றுள்ளார்கள். திமுக கட்சியைச் சேர்ந்தவர்கள் அமைச்சர்கள் அதிகாரத்தை திருஷ்பிரயோகம் செய்து முற்றிலும் தேர்தல் விதிமுறைகளை மீறி செயல்படுத்தினார்கள். திமுக இவ்வளவு பெரிய விதிமுறைகளை ஈடுபட்ட போதும் ஊடக நபர்களும் பத்திரிக்கை நண்பர்களும் வெளிச்சம் போட்டு காட்டாதது வருத்தம் அளிக்கிறது. திமுக இதை வைத்து மிகப்பெரிய வெற்றி கொண்டாடுவது மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். 2024 பாராளுமன்ற தேர்தலில் அதிமுக வெற்றி பெறும். இது தேர்தல் ஆணையத்தின் தோல்வி என்று தெரிவித்துள்ளார். 

click me!