முதலில் பாஜக கிளை தலைவரிடம் மோதுங்க, பிறகு எங்ககிட்ட வாங்க… திருமாவை சாடும் அண்ணாமலை!!

By Narendran S  |  First Published Mar 2, 2023, 9:23 PM IST

துணை முதல்வராக வேண்டும் என்று ஆசை இருப்பதால் தான் ஸ்டாலினிடம், கூட்டணியைவிட்டு போய்விடுவேன் என்று திருமாவளவன் சொல்லிக் கொண்டிருப்பதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 


துணை முதல்வராக வேண்டும் என்று ஆசை இருப்பதால் தான் ஸ்டாலினிடம், கூட்டணியைவிட்டு போய்விடுவேன் என்று திருமாவளவன் சொல்லிக் கொண்டிருப்பதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுகவிலிருந்து வெளிவர திருமாவளவன் புதிய யுக்தியை கையாள்கிறார். திமுக கூட்டணியிலிருந்து வெளி வரவேண்டுமென்றால் தைரியமாக வரலாம். சாக்கு போக்கு ஏன் திருமாவளவன் கூறுகிறார் என்று தெரியவில்லை.

இதையும் படிங்க: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்… 66,575 வாக்குகள் வித்தியாசத்தில் ஈவிகேஎஸ் இளங்கோவன் அமோக வெற்றி!!

Latest Videos

பாஜக, அண்ணாமலையை மட்டுமே பேசுவதற்கு திருமாளவன் கூட்டம் போடுகிறார். கூட்டணி நட்பு என்பது ஒரு சித்தாந்தத்தோடு இருப்பதால் பாஜக அதன் கூட்டணி கட்சியான அதிமுகவின் இரட்டை இலை சின்னத்திற்கு ஆதரித்து வாக்கு சேகரித்தது. எங்களின் கூட்டணி பலமாக தான் கூட்டணி உள்ளது. கருத்தியல் குறித்து விவாதிக்க தயாரா என கேட்கும் திருமாவளவன், தடா பெரியசாமிகிட்ட கருத்தியல் தொடர்பாக விவாதிக்க தயாரா? ஜாதிய அமைப்புகளை கொண்ட கட்சியாக விசிக உள்ளது.

இதையும் படிங்க: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் டெபாசிட் இழந்த நாம் தமிழர் கட்சி..! காரணம் இதுதான்

தமிழ்நாட்டில் நடக்கும் பாதி கலவரங்களுக்கு திருமாவளவன் தான் காரணம். பாஜக - விசிக இடையே யுத்தம் இல்லை. விசிகவினர் தடா பெரியசாமியை எதிர்க்கிறேன் என்று அவரது காரை அடிக்க தெரியாமல் அடிப்பது, வீட்டுக் கண்ணாடியை உடைக்க தெரியாமல் உடைப்பது என விசிகவினர் என்னென்னவோ செய்கிறார்கள். முதலில் பாஜக கிளை தலைவரிடம் மோதுங்க, பிறகு எங்ககிட்ட வாங்க திருமாவளவன் என்று தெரிவித்துள்ளார். 

click me!