100 நாளில் தீர்வு.. சாவி தொலைந்துவிட்டதா? இல்ல பெட்டியே தொலைந்துவிட்டதா? திமுகவை பங்கமாய் கலாய்க்கும் சீமான்.!

By vinoth kumarFirst Published Jun 27, 2021, 3:36 PM IST
Highlights

திமுக தான் எல்லாவற்றையும் தீர்க்கும் மாமருந்து; தமிழகத்தின் அத்தனைப் பிரச்சினைகளுக்கும் திமுக ஆட்சியமைந்தவுடன் 100 நாட்களுக்குள் தீர்வு எட்டப்படும் என வானளவ அளந்தார்கள். 50 நாட்களைக் கடந்துவிட்டோம். பாதி காலக்கெடு முடிந்துவிட்டது.

தமிழகத்தின் அத்தனைப் பிரச்சனைகளுக்கும் திமுக ஆட்சியமைந்தவுடன் 100 நாட்களுக்குள் தீர்வு எட்டப்படும் என வானளவ அளந்தார்கள் என சீமான் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

தமிழக முதல்வராக நான் பதவியேற்ற 100 நாள்களில் போர்க்கால அடிப்படையில் அந்த மனுக்கள் அனைத்தையும் நிறைவேற்றுவதாக ஸ்டாலின் உறுதியளித்திருந்தார். ஸ்டாலின் முதல்வராக பதவியேற்றதும் அதற்காக ஒரு அதிகாரியையும் நியமித்தார். இந்நிலையில் ஸ்டாலின் தமிழகத்தின் பிரச்சனைகளை தீர்த்து விட்டாரா என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- திமுக தான் எல்லாவற்றையும் தீர்க்கும் மாமருந்து; தமிழகத்தின் அத்தனைப் பிரச்சினைகளுக்கும் திமுக ஆட்சியமைந்தவுடன் 100 நாட்களுக்குள் தீர்வு எட்டப்படும் என வானளவ அளந்தார்கள். 50 நாட்களைக் கடந்துவிட்டோம். பாதி காலக்கெடு முடிந்துவிட்டது.

என்னவானது தமிழகத்தின் பிரச்சினைகள்? எப்போது எல்லாவற்றையும் தீர்க்கப் போகிறார்கள்? அதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லையே! மக்களின் பிரச்சினைகளைக் கடிதங்களாய் பெற்ற அப்பெட்டிகள் எங்கே? அதனை எப்போது திறப்பார்கள்? சாவி தொலைந்துவிட்டதா? இல்லை! பெட்டியே தொலைந்துவிட்டதா? என காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.

click me!