இந்துக்களை பிடிக்காத திமுக அரசு.! பக்தர்களிடம் பணம் பறிக்கும் அறநிலையத்துறை தேவையில்லை.. எல்.முருகன் ஆவேசம்!

By vinoth kumar  |  First Published Dec 13, 2023, 6:37 AM IST

ஸ்ரீரங்கம் கோயில் மூலஸ்தானம் அருகே ரத்தம் சிந்தியதால், மூலவர் ரங்கநாதர் சன்னதியின் நடை சாத்தப்பட்டு, அந்த இடத்தை சுத்தப்படுத்தி, பரிகார பூஜைகள் மேற்கொள்ளப்பட்டு, பின்னர் ஒரு மணிநேரத்துக்கு பிறகு மீண்டும் திறக்கப்பட்டது.


கோயிலுக்கு வரும் பக்தர்களிடம் பணம் பறிக்கும் அறநிலையத்துறை தேவையில்லை என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஆவேசமாக கூறியுள்ளார். 

108 வைணவ திவ்ய தேசங்களில் முதல் திவ்ய தேசமாகவும், பூலோக வைகுண்டம் என்றும் போற்றப்படுவது திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்த கோயிலில் நடைபெறும் முக்கிய உற்சவமான வைகுண்ட ஏகாதசி பெருவிழா தொடங்கிய நிலையில், ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட ஐயப்ப பக்தர்கள் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் பெருமாளை வழிபட வரிசையில் காத்திருந்தனர். 

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க;- தேசத்தை துண்டாட நினைப்பவர்களை பாஜக அரசு ஒருபோதும் சகித்துக் கொள்ளாது! திமுகவை எகிறி அடிக்கும் வானதி சீனிவாசன்!

அப்போது பக்தி பரவசத்தில் மூலஸ்தானத்தில் கோவிந்தா கோவிந்தா என கோஷமிட்டு பெருமாளை வழிபாடு செய்த போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் ரவி, கோவில் பாதுகாப்பு ஊழியர்கள் 3 பேர் இங்கு கோவிந்தா கோவிந்தா என கோஷம் செய்யக்கூடாது என கூறியுள்ளனர். அப்போது இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தாக்கியதில் ஆந்திர ஐயப்ப பக்தர் சென்னா ராவ் என்பவருக்கு மூக்கு உடைந்து ரத்தம் கொட்டியுள்ளது. இதனால், ஆத்திரமடைந்த பக்தர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதனிடையே, ஸ்ரீரங்கம் கோயில் மூலஸ்தானம் அருகே ரத்தம் சிந்தியதால், மூலவர் ரங்கநாதர் சன்னதியின் நடை சாத்தப்பட்டு, அந்த இடத்தை சுத்தப்படுத்தி, பரிகார பூஜைகள் மேற்கொள்ளப்பட்டு, பின்னர் ஒரு மணிநேரத்துக்கு பிறகு மீண்டும் திறக்கப்பட்டது. இதுதொடர்பாக வீடியோ வைரலானது. இந்த தாக்குதல் சம்பவத்திற்கு பாஜக கட்சி தலைவர்கள் கடும் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறையே தேவையில்லை என எல்.முருகன் கூறியுள்ளார்.

இதையும் படிங்க;-  “இந்து தர்மத்தின் மீது நம்பிக்கை இல்லாத அரசு, இந்துக் கோயில்களில் இருக்க வேண்டியதில்லை..” அண்ணாமலை காட்டம்..

இதுதொடர்பாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்;- கோயிலுக்கு வரும் பக்தர்களை அநாகரீகமாக நடத்துவதையும், இந்து கோயில் பாரம்பரியத்தை சீர்குலைப்பதிலும்  தொடர்ந்து முழு முச்சுடன் செயல்பட்டு வரும் அறநிலையத்துறைக்கும், தமிழக அரசுக்கும் எனது கடும் கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஸ்ரீரங்கம் கோயிலுக்குள் பக்தர்கள் மீது சரமாரி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கோயிலுக்கு வரும் பக்தர்களிடம் பணம் பறிக்கும் அறநிலையத்துறை தேவையில்லை. தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறையே தேவையில்லை. இந்துக்களை பிடிக்காத  திமுக அரசிடம் வேறு எதை எதிபார்க்க முடியும். தமிழகத்தில் பாஜக ஆட்சியமைத்தால் அறநிலையத்துறை இருக்காது என எல்.முருகன் தெரிவித்துள்ளார். 

click me!