நீங்கள் கேட்டதை தான் நாங்களும் கேட்கிறோம்; உங்களுக்கு வந்தா ரத்தம் எங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா? உதயகுமார்

By Velmurugan s  |  First Published Dec 12, 2023, 6:59 PM IST

2015ல் வெள்ளம் ஏற்பட்ட போது திமுக வெள்ளை அறிக்கை கேட்டது, அதே போல தான் நாங்களும் வெள்ளை அறிக்கை கேட்கிறோம் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பி உள்ளார்.


அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இன்று மதுரையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "மழை வெள்ள பாதிப்பு குறித்து பேச அதிமுகவுக்கு என்ன தகுதி இருக்கிறது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கேட்கிறார். அப்படி கேட்க உங்களுக்கு என்ன யோக்யதை இருக்கிறது என திமுக அரசைப்பார்த்து மக்கள் கேட்கின்றனர். மாநகராட்சி மேயர், உள்ளாட்சி அமைச்சர் போன்ற பொறுப்புகளை வகித்த முதலமைச்சர் ஸ்டாலின் சென்னையை சிங்கார சென்னையாக மாற்றிக்காட்டுவோம் எனக்கூறிவிட்டு, அதை கூவமாக மாற்றிவிட்டார்.

சேலத்தில் நடைபெறவுள்ள திமுக இளைஞரணி மாநாட்டுக்கு காட்டிய அக்கறையை மீட்பு பணிகளில் காட்டவில்லை. கார் ரேஸ் நடத்துவதற்கு காட்டிய அக்கறையை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் காட்டவில்லை. ஒரு இடத்தில் கூட தண்ணீர் தேங்காது என்று சொன்னீர்கள். அதை நம்பி தான் மக்கள் இவ்வளவு துயருக்கு ஆளானார்கள்.

Tap to resize

Latest Videos

undefined

Jos Alukkas: குற்றவாளி ரன்னிங், ஜம்பிங்கில் திறமை வாய்ந்தவராக இருந்ததால் அவரை பிடிப்பதில் சவால் - போலீஸ் விளக்கம்

ஒவ்வொரு ஆண்டும் தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து தமிழக பேரிடர் நிவாரண நிதிக்கு கொடுக்கக் கூடிய பங்களிப்பு தொகையை தான் தற்போது மத்திய அரசு அளித்துள்ளது. மத்திய குழுவினரின் ஆய்வுக்கு பின்னரே முழுமையாக நிவாரணம் வழங்குவார்கள். தமிழக நிதி அமைச்சருக்கு இது தெரிந்தும், பாஜக ஆளாத மாநிலங்களில் குறைவான நிவாரண நிதி வழங்குவதாக மக்களை குழப்புகிறார். 

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

மத்திய அரசு, மாநில அரசுக்கு தரும் நிவாரண தொகை என்பது யானை பசிக்கு சோள பொரி போல என முன்னாள் நிதியமைச்சர் அன்பழகன் சட்டசபையில் சொன்னார். அதன்படி தான் நடக்கிறது. பால் தட்டுப்பாடு இல்லவே இல்லை என அமைச்சர் மனோ தங்கராஜ் சொல்கிறார். பொய் பேசலாம், அதற்காக இவ்வளவு பொய் பேச கூடாது. 

ராமஜெயம் கொலை வழக்கில் தொடர்புடைய முக்கிய நபர் வெட்டி படுகொலை; திருச்சியில் பரபரப்பு

மழை வெள்ள பாதிப்புகளை பார்வையிட எதிர்கட்சி தலைவர்களில் முதன்முதலில் எடப்பாடி பழனிச்சாமி தான் களத்திற்கு போனார். அரசு கைவிட்டு விட்டாலும் அதிமுக உதவ வேண்டும் என சொன்னவர் எடப்பாடி. எனவே, அதிமுக வெள்ள நிவாரண பணிகளில் ஈடுபடவில்லை எனக்கூறுவது பொய்யான குற்றச்சாட்டு. எடப்பாடி பழனிச்சாமி சொன்னதை கேட்டு தான் அரசே செயல்பட்டது.

2015ல் மழை வெள்ள பாதிப்பு ஏற்பட்ட போது இதேபோல வெள்ளை அறிக்கை வெளியிடுங்கள் என கேட்டவர் ஸ்டாலின். இப்போது நாங்கள் கேட்டால் ஏன் கோபம் வருகிறது. உங்களுக்கு வந்தா இரத்தம், எங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா?" என தெரிவித்துள்ளார்.

click me!